பக்கம்:இருபெருந்தலைவர்.pdf/25

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரு பெருந்தலைவர் தம் அதிகார எல்லையையும் மீறி, திரு. லட்சுமி நரசிம்முலு உருவாக்கிய விண்ணப்பத்தில் எவரையும் கையொப்பமிடாதவாறு காவல் புரியத் தொடங்கினார் ஆனால், என்ன வியப்பு-அதுவும் அந்த நாளில் சென்னை யில்மட்டும் இருந்த பெருங்குடி மக்கள் 12000 பேச் திரு. லட்சுமி நரசிம்முலுவின் கட்டளைக்கும் தங்கள் மனச்சாட்சிக்கும் பணிந்து விண்ணப்பத்தில் கையொப்பமிட்டார்கள். 12000 பேர்கட்குமேல் கையொப்பமிட்டு உருவாக்கப்பெற்ற விண்ணப் படம் இங்கிலாந்திற்குச் சென்றது. அந்த விண்ணப்பத்தின் வேகத்தைக் குறைக்க, சென்னையிலிருந்த கம்பெனியின் கையாட கள் எவ்வளவோ உத்திகளை எல்லாம் கையாண்டனர். ஆனால், கால தாமதமாயினும் திரு. லட்சுமி நரசிம்முலுவின் முயற்சி கருதிய பயனைக் கொடுக்கவே செய்தது.

அரசாங்கப் பள்ளிக்கூடங்களில் பைபிளைப் புகுத்தும் முயற்சி மீண்டும் 1858-ஆம் ஆண்டு தலை ஆாக்கியது. அந்தச் சமயத்தில் அதை எதிர்த்துப் போர்க்கொடி உயர்த்திய திரு. லட்சுமி நரசிம்முலுவுக்குப் பெருந்துணையாய் விளங்கியவர்கள் தமிழ் இனம் கல்வி ஒளி பெறுவதற்குச் சிறந்த துணை வராய் விளங்கியவரும், பச்சையப்பர் அறநிலயத்தை உருவாக்கிய இரு பெருஞ் சான்ருேராகிய ஜியார்ஜ் கார்ட்டனும், ஜான் புரூஸ் கார்ட்டனும் ஆவர். இம்மூவர் முயற்சியும் வென்றது.

1852-ஆம் ஆண்டில் டான்பி சைமூர் ' என்ற இங்கிலாந்து பாராளுமன்றத்தின் உறுப்பினர் இந்தியாவைக் கண்டு களிக்க வந்தார். அந்தச் சமயத்தில்