பக்கம்:இருபெருந்தலைவர்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறப்போர் அண்ணல சென்னை மாநகரினின்றும் அவ்வப்போது ஏராளமான குடிமக்களின் கையொப்பங்கள் பெற்று அனுப்பப்பெற்ற விண்ணப்பங்கள் வாயிலாகத் திரு. லட்சுமி நரசிம்முலுவின் பெயர் இங்கிலாந்து நாட்டுப் பாராளு மன்ற உறுப்பினர் பலருக்கும் தெரிந்த பெயராகவே இருந்தது. சென்னைத் துறை முகத்தில் கால்வைத்தவுடனே பாராளுமன்ற உறுப்பினர் சைமூர், திரு. லட்சுமி நரசிம்முலுவைப்பற்றியே விசாரித்தார். லட்சுமி நரசிம்முலு நேரில் அறிமுகப் படுத்தப்பட்டதும் இருவரும் இணைபிரியா நண்பர் ஆயினர். சைமூர், லட்சுமி நரசிம்முலுவின் விருந்தின ராகவே சென்னையிலிருந்தார் அதன் பயனாக நாட்டு மக்களின் குறைகளை எல்லாம் பாராளுமன்ற உறுப்பினருக்குத் தெளிவாகவும் விரிவாகவும் எடுத்துச் சொல்லும் வாய்ப்பு லட்சுமி நரசிம்முலுவுக்குக் கிடைத்தது. பிரிட்டிஷ் ஆட்சியின் பல்வேறு குறைகளையும் லட்சுமி நரசிம்முலு பயமின்றி எடுத்துக் காட்டினர்; இந்து மக்களின் அரசியல்-சமய உரிமைககள் மறுக்கப்படுவதை எல்லாம் சுட்டிக் காட்டினர்; அரசாங்க அதிகாரிகளின் முறையற்ற ஆட்சியினைச் சான்றுகள் காட்டி விளக்கினார். லட்சுமி நரசிம்முலுவின் கள்ளம|ற்ற உள்ளத்திலிருந்து குமுறி வந்த குறைகளை எல்லாம் கேட்ட சைமூர், அவரை அழைத்துக்கொண்டே தமிழகத் தைச் சுற்றிப் பார்வையிடப் புறப்பட்டார். இருவரும் கடலூர், குடந்தை, கோவை முதலான இடங்கட்கு நேரில் சென்று, மக்களின் துயரைக் கண்கூடாகக் கண்டனர். நிலவுடைமையாளர்கள் தாங்க முடியாத வரிச் சுமையின் கீழ் தவிப்பதையும், வரி செலுத்தாதோர் அரசாங்க அதிகாரிகளால் காட்டுமிராண்டித்