பக்கம்:இருபெருந்தலைவர்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

இரு பெருந்தலைவர் தனமாகத் தண்டிக்கப்படுவதையும் சைமூர் கண்ணெதிரே கண்டார். தாசில்தார் அலுவலகத்திற்கு முன்பு வரிசெலுத்த முடியாத வறியவர்கள், பொசுக்கும் வெயிலில் பெரும்பாறைகளைச் சுமந்துகொண்டு நிற்க வைக்கப்பெற்றிருப்பதைச் சைமூர் கண்டார் இன்னும் சில இடங்களில் தாலூக்கா அலுவலகத்திற்கு முன்பு வரி செலுத்த முடியாத உழவர்கள் திய்க்கும் வெயிலில் தங்கள் கால் கட்டை விரல்களைத் தலையால் தொடும்படி வில்போல வளைத்து நிறுத்தி வதைக்கப்படுவதையும் அதைக் கண்டும் காணுமலும் தாசில்தார் காகிதங்களேக் கட்டிக்கொண்டு அழுவ தையும் சைமூர் நேரில் கண்டார். தமிழகத்தில் தாம் நேரில் கண்டதையும் கேட்டதையும் ஒன்று விடாமல் குறிப்பெடுத்துக்கொண்டார் சைமூர்; என்னென்ன கருவிகளைக்கொண்டு ஏழை உழவர்களைக் கிழக்கிந்தியக்கம்பெனி" வாட்டிவதைத்ததோ, அந்தக் கருவிகள், கற்களை எல்லாம் ஒரு பெரு மூட்டையாகக் கட்டிக்கொண்டார். அனைத்தையும் எடுத்துக்கொண்டு அடக்க முடியா ஆத்திரத்துடன் தாயகம் திரும்பினர் சைமூர். 1854-ஆம் ஆண்டு, ஜூலே மாதம், பாராளுமனறக் கூட்டத்தில் சைமூர் தமிழகத்தில் மக்கள் படும் அவதியைப்பற்றித் தாம் நேரில் கண்டும் கேட்டும் அறிந்த செய்திகளே எல்லாம் எடுத்துச் சொன்னர்; குற்றவாளிகள் மட்டுமல்லாமல் வரி கட்ட முடியாத உழவரும் எவ்வளவு கொடுமைகளுக்கு இரையாக்கப்பட்டனர் என்ற செய்திகனைக் கேட்பவர் நடுங்க எடுத்துரைத்தார். அச்சந்தர்ப்பத்தில் சைமூரின் ஆவேச முழக்கத்தைக் கண்டு அஞ்சிய ஏகாதிபத்தியத்தின் சீடர்கள், எதிர்த்து ஆரவாரம் புரிந்தார்