பக்கம்:இருபெருந்தலைவர்.pdf/28

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறப்போர் அண்ணல் கள். ஆனால், இந்திய ஆட்சிக் கழகத்தின் தலைவர் சர். ஊட்டு" என்பவர் உடனே ஆய்வுக் குழு ஒன்று அமைத்துக் கண்டிப்பான ஆராய்ச்சியை கடத்தும் படி கட்டளை பிறப்பித்தார். சைமூரின் சொற்பொழிவை ஒட்டிப் பாராளு மன்றத்தில் நடந்த சொற்போரின் விவரங்கள் இந்திய அரசாங்கத்திற்கு அனுப்பப்பெற்றன. இரண்டே மாதங்களில் ஆராய்ச்சிக் குழு இந்தியா வந்து இறக்கியது. ஏராளமான சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டன. இதற் கிடையில் சைமூரைச் சிறி எழச்செய்த லட்சுமி நரசிம்முலு, நாட்டில் நடக்கும் கொடுமைகளைப் பற்றி மீண்டும் ஒரு பெருவிண்ணப்பம் தயாரித்து, ஏராளமான மக்களைக் கையொப்பமிடச் செய்து மறுபடியும் இங்கிலாந்து பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைத்தார்." ஆலபிமார்லி பிரபு அதை 1856-ஆம் ஆண்டு, ஏப்பிரல் திங்கள் 14-ஆம் நாள் பிரபுக்கள் சபையின் ஆராய்ச்சிக்கு உரிமைப்படுத்தினர். ஏறத்தாழ இதே சந்தர்ப்பத்தில் இந்தியா வந்த ஆராய்ச்சிக் குழுவும் தன் அறிக்கையைப் பாராளு மன்றத்திற்கு அனுப்பியது. எல்லாவற்றையும் ஆராய்ந்து பார்த்த பாராளுமன்றம், ஏழை மக்கள் பால் கிழக்கிந்தியக் கம்பெனி நடந்துகொண்ட முறைகேடான செயல்களையும் கொடுங்கோலாட்சியையும் வன்மையாகக் கண்டித்து, ஆணைகள் பிறப்பித்தது. இதற்கிடையில் 1852ல் சென்னைச் சுதேசிச் சஙகம் லட்சுமி நரசிம்முலு காட்டிய வழியில் ஒரு விரிவான சுவை கிறைந்த விண்ணப்பத்தைத் தயாரித்தது. அதில் தென்னக மக்கள் கிழக்கிந்தியக் கம் பெனியின் கொடுங்கோலாட்சிக்கு இரையாகிப் படும் அவதிகளெல்லம் விளக்கப்பெற்றிருந்தன.