பக்கம்:இருபெருந்தலைவர்.pdf/31

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரு பெருந்தலைவர் வின் நீண்ட மனு, இங்கிலாந்து நாட்டின் நல்லறிஞர்களின் கருத்தையெல்லாம் கவர்ந்தது. அதனாலே தான் அதே ஆண்டில் மக்கள் சபையில் பேசிய அறிஞர் ஜான் பிரைட்டு ' என்பவர், லட்சுமி நரசிம்முலுவின் மனுவைக் குறிப்பிட்டே சொற்பொழிவாற் றினார். லட்சுமி நரசிம்முலுவின் மனு மிக நீண்ட ஒன்று மிகத் திறமையாக வரையப்பட்டதுங்கூட. அவருடைய விண்ணப்பத்தில் கண்ட பல குறை களை உண்மையென்று நிறுவல்ல வேறு பல கடிதங்களும் எனக்குச் சென்னேயினின்றும் கிடைத்துள்ளன. அவையனைத்தும் ஒர் ஆராய்ச்சிக் குழு அமைக்கப்பெற்றால் கூறப்பட்டுள்ள புகார்களுள் ஒவ்வொன்றையும் கநிறுவிக்காட்டமுடியுமென உறுதி கூறுகின்றன,” என்பது அவர் கூற்று. இவ்வாறு தம் நண்பர் பலரோடும் சேர்ந்து லட்சுமி நரசிம்முலு நடத்திய அறப்போர், பல் லாண்டுகள் தொடர்ந்து நடைபெற்றது. மீண்டும் 1858-ஆம் ஆண்டில் பதினான்காயிரம் பேர் கையொப்பமிட்ட ஒரு விண்ணப்பத்தை லட்சுமி நரசிம்முலு இங்கிலாந்து அரசியலாருக்கு அனுப்பி வைத்தார். அந்த மனுவில் உடனடியாகக் கிழக்கிங்தியக் கம்பெனியின் ஆட்சியிலிருந்து இந்தியாவை விடுதலை செய்து, இங்கிலாந்து தேசத்தின் நேரடி நிருவாகத்தின் கீழ் இந்திய அரசியலைக் கொண்டு வரவேண்டும் என்று வற்புறுத்தியிருந்தார். என்னே அவருடைய வருமுன் செயலாற்றும் அறிவு! விரல் விட்டு எண்ணக்கூடிய வியாபாரிகளின் கையிற்சிக்கி நாடு அல்லல்படும் அவமானத்தை நீக்கி, இங்கிலாந்து அரசாங்கத்தின் நேரடி நிருவாகத்தின்கீழ் இந்தியாவைக் கொண்டு வருவது