பக்கம்:இருபெருந்தலைவர்.pdf/33

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

இரு பெருந்தலைவர்


மார்லி பிரபு, பிரபுக்கள் சபையின் முன் வைத்தார். சென்னையினின்றும் திரு. லட்சுமி நரசிம்முலு நடத்திய அறப்போருக்குத் துணையாகப் பம்பாயிலிருந்தும் கல்கத்தாவிலிருந்தும் பல பெரியோர் மனுக்களை அனுப்பி வைத்தனர். இவையெல்லாம் சேர்ந்து கிழக்கிந்தியக் கம்பெனி இயக்குனர்களின் தொகை முப்பதிலிருந்து பதினெட்டாகக் குறையும்படி செய்தது. அந்தப் பதினெண்மரிலும் ஆறுபேர் இங்கிலாந்து அரச பீடத்தால் நியமனம் செய்யப்பட்டனர். மேலும், நாட்டின் உத்தியோகங்கள் யாவற்றிற்கும் போட்டிகள் வைக்கப்பட்டு, தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்கும் முறையும் அமுலுக்குக் கொண்டுவரப்பட்டது. அதோடு, நீதிமன்றங்களில் இருந்த ஒழுங்கினங்கள் களையப்பட்டு, உய்ர்நீதி மன்றத்தின் ஆட்சி எல்லை விரிவாக்கப் பட்டது. இவ்வாறு பல அரிய சீர்திருத்தங்கள் நடைபெறுவதற்கு லட்சுமி நரசிம்முலுவின் அறப்போரே அடிப்படையாய் அமைந்தது. அதோடு நில்லாமல் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சிக்குச் சாவு மணி அடிக்கவும் அண்ணலின் அறப்போர் துணை செய்தது. ஆம். தமிழகத்தில் மக்கள் தலைவர் லட்சுமி நரசிம்முலுவின் தலைமையில் நடந்த அறப்போர்-வடநாட்டில் உள்நாட்டு மன்னர்களின் தலைமையில் 1857-ஆம் ஆண்டு நடைபெற்ற மாபெருங்கருவிப் போர்-இவ்விரண்டும் சேர்ந்தே கிழக்கிந்தியக் கம்பெனியைக் குழி தோண்டிப் புதைத்தன. கும்பெனி ஆட்சியினின்றும் விடுதலை பெற்று, இந்தியத் துணைக் கண்டம் விக்டோரியா பேரரசியின் நேரடி ஆட்சிக்கு உரியதாயிற்று.

19-ஆம் நூற்றாண்டில் தமிழகம் கல்வித் துறை-