பக்கம்:இருபெருந்தலைவர்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறப்போர் அண்ணல் 23 யில் பல முன்னேற்றங்களைக் கண்டது. சிறப்பாக ஆங்கிலக் கல்வியை முறையாகப் பெறும் பேறு நம்மவர்கட்குக் கிடைத்தது. அக்கல்வியால் தீமைகள் விளைந்தது எவ்வளவு உண்மையோ, அவ்வளவு உண்மை நன்மைகள் விளைந்ததும். அவ்வகையில் தமிழகத்தில் கல்வி நெறி தழைத்தோங்க ஒரு நாற்றாண்டிற்கு முன்பு கால்கொண்ட கலைக்கோயில்களுள் தலைசிறந்தது பச்சையப்பர் கல்லூரியே. வாடகைக் கட்டடத்தில் சின்னஞ்சிறு பள்ளியாய்த் தொடங்கிய அது, மிகு விரைவில் ஒரு பெருங் கல்லூரியாவதற்குத் துனைபுரிந்த இரு பெரிய ஆங்கில நாட்டுச் சான்றோர் ஜான் புரூஸ் நார்ட்டனும், கார்ட்டனும் ஆவர். தந்தை மகன் உறவு பூண்ட இவர்கள், பச்சையப்பர் அறநிலையம் உருவாவதற்கு மேற்கொண்ட முயற்சிகளை நாம் உன்னுந்தொறும் உன்னுக்தொறும் நம் உள்ளம் உருகும் பச்சையப்ப வள்ளல் அறப்பணிகட்காகத் தேடித் திரட்டிவைத்த செல்வமெல்லாம் பாழாய்ப்போகாமல் காத்த புண்ணிய சீசலர்கள் இவர் களை இன்று வட வேங்கடம் முதல் தென் குமரிவரை சைவ வைணவக் கோயில்கள் பலவற்றிலும் பச்சையப்பர் அறங்கள் தழைத்து விளங்குகின்றன என்ருல்-அந்த அறங் களுக்குப் போக எஞ்சிய தொகையினின்றும் சிறந்த கலைக் கோயில்கள் நடைபெறுகின்றன என்ருல்அதற்குக் காரணம் இருபெரு நார்ட்டன்களின் ஒரு பெருந்தொண்டே." இத்தகைய பெரும்புகழ் வாய்ந்த ஜான் புரூஸ் கார்ட்டன் 1854-ஆம் ஆண்டிலேயே, இன்றைக்கு 104 ஆண்டுகட்கு முன்பே, லட்சுமி நரசிம்முலு பச்சையப்பர் அறநிலையத்தின் காவலர்களுள்