பக்கம்:இருபெருந்தலைவர்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

இரு பெருந்தலைவர்


ஒருவராக அமைய வேண்டுமென்ற தம் ஆவலை எல்லோரும் அறியப் பச்சையப்பர் கல்லூரியின் ஆண்டுவிழாக் கூட்டத்தில் பேசும் பொழுதே வெளியிட்டார் ; நம்மிடையே இன்னும் ஒரு பெரிய மனிதர் நமக்குத் துணை புரிய இருக்கின்றார், அவர் விரைவிலே நம்முடன் சேர்ந்து தொண்டு புரிவாரென நம்புகின்றேன். சமீப காலமாக அவரைப் பற்றி அரசாங்க மேலிடத்தில் பல தவறான கருத்துக்கள் எற்பட்டிருக்கின்றன. ஆனால், உடல் உழைப்பாலும் பொருட்செலவாலும் செய்துள்ள தியாகங்கள் காரணமாகவும்சபொது மக்களுக்காக வரிந்து கட்டிக்கொண்டு உடலும் உயிரும் சோரக் காலமெல்லாம் உழைத்ததன் விளைவாகவும் அவர் தம்முடைய உயர்ந்த ஒழுக்கத்தையும் மாசற்ற தொண்டுள்ளத்தையும் மக்கள் மன்றத்தில் நிறுவிக் காட்டியுள்ளார். ஆம். உயர்திரு. லட்சுமி நரசிம்முலு செட்டியார் அவர்களை நினைத்துக்கொண்டுதான் இதையெல்லாம் சொல்கிறேன் !' என்று கேட்டவர் உள்ளம் நெகிழ, உவகை கொண்டு, கண்களில் நீர் கலங்கப் பேசினர். கார்ட்டன் துரை இவ்வாறு தம் நெஞ்சம் திறந்து பேசிய அந்நாளில், லட்சுமி நரசிம்முலு என்றாலே ஆட்சியாளருக்கு வேம்பாய் இருந் தது. அவரை அரசாங்கத்தார் ராஜத்துவேஷி யாகவே கருதினர். வேட்டை நாய்போலப் போலீஸ் அவரை மோப்பம் பிடித்த வண்ணம் இருந்தது. அவருடைய பேச்சுக்களெல்லாம் மிகக் கவனமாக ஆராயப்பட்டன. பிற்காலத்தில் தேச பத்தர்களை இரகசியப் போலீசார் சுற்றிச்சுற்றி வளையமிட்டுக் கொண்டிருந்தது போல அங்காளில் லட்சுமி நரசிம் முலுவை இரகசியப் போலீசார், அவர் எங்குச் சென்