பக்கம்:இருபெருந்தலைவர்.pdf/39

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரு பெருந்தலைவர் 1864-ஆம் ஆண்டில் திரு. லட்சுமி நரசிம்முலு பாடுபட்டுச் சேர்த்த பணத்தையெல்லாம் நாட்டின் நலனுக்காக வாரியிறைத்துவிட்டு வேறுங்கையராய் நிற்கும் நிலைக்கு இரையானர். மிகுந்த பொருட் செலவில் அவர் நடத்திய கிரெஸென்ட் (இளம் பிறை) நாட்டு மக்களைக் கப்பியிருந்த அடிமை இருள் நீங்க ஒளி விசியது உண்மைதான். ஆனால், செல்வச் சீமான் திரு. லட்சுமி நரசிம்முலுவை வறியவர் ஆக்கியதும் அந்த இளம்பிறை தான். திரு. லட்சுமி நரசிம்முலுவின் வியாபாரம் நாளுக்கு நாள் நலிவடைந்தது. அவருடைய மைந்தரும் வாணிகத்தில் காட்டமின்றிப் பொருள் இழப்புப் பேரளவிற்கு ஏற்படும்படி செய்துவிட்டார். இளம்பிறைதான் திரு. லட்சுமி நரசிம்முலுவின் செல்வ வாழ்வும் ஒழிந்தது. இதற்குப் பின் வாழ்நாள் முழுவதும் திரு, லட்சுமி நரசிம்முலு வறுமையோடு போராடிப் போராடியே - உயிர் வாழ்ந்து - உயிர் துறந்தார். இறுதியாக 1868-ஆம் ஆண்டில் மாவீரர் லட்சுமி நரசிம்முலு மறைந்தபோது, இங் தப் பெருந்தகைக்கு இணையான தேசபத்தரும் தியாகியும் இந்தியா எங்கணும் இல்லை என்று பாரத மக்கள் போற்றிப் புகழ்ந்த புகழ்ச் செல்வங் தான், அவர் விட்டுச் சென்றது. இந்த வகையில் பிற்காலத்தில் தோன்றிய பெருவீரர் வ. உ. சி.க்கும் முன்னாடியாய் அமைந்தவர் திரு. லட்சுமி நரசிம்முலு என்றே சொல்ல வேண்டும். வழக்கம்போல 1869-ஆம் ஆண்டு பச்சையப்பர் கல்லூரியின் ஆண்டு விழாவில் சொற்பொழிவாற்றிய ஜான் புரூஸ் நார்ட்டன், தம் அரிய நண்பர் திரு லட்சுமி நரசிமுலுவின் மறைவை நினைந்து திரு. லட்சுமி நரசிம்முலுவின் மறைவை கினேந்து