பக்கம்:இருபெருந்தலைவர்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறப்போர் அண்ணல் உள்ளம் உருகிப் பேசினார்: அவர் எனக்குப் பல்லாண்டுகளாக மிக நெருங்கிய நண்பர்களுள் ஒருவராய் இருந்தார். நான் மனமாறப் போற்றக்கூடிய வேறொரு தலைவரை இந்நாள் வரை கண்டதில்லை இப்பொழுது நான் உளமுருகி உங்களிடம் பேசுவது திரு. லட்சுமி நரசிம்முலுவின் மறைவால் எனக்குச் சொந்த முறையில் ஏற்பட்ட இழப்பைப்பற்றி அன்று ஒரு சிறந்த பெரிய மனிதரை இழந்து விட்டதால் சமூகம் முழுவதும் அடைந்திருக்கும் பேரிழப்புப் பற்றியேயாகும். உயர்ந்த படிப்பும் ஒப்பற்ற திறமைகளும் சிறந்த பண்பாடும் கூர்ந்த மதியும் பெற்றிருந்த லட்சுமி நரசிம்முலு வாய் வீச்சு விரரல்லர். உ ண்மையான தேசபத்தர் அவரே. ஆரவாரமான மேடைப் பேச்சாளர் அல்லர் அவர் கேட்போர் சிந்தனைக்கும் நியாய உணர்ச்சிக்கும் விருந்தளிக்கும் காவலர் அவர். நெடுங்காலத்திற்கு முன்பே தம் திறமைகளையும் செல்வச் சிறப்பையும் நாட்டின் நல்வாழ்விற்காகக் காணிக்கை யாக்கத் துணிந்த உத்தமர் அவர். அவ்வாறு அவர் துணிந்த அந்தக் காலம் ஆபத்துகள் குறைவாய் இருப்பினும் அல்லல்கள் நிறைந்த காலம், இன்றிருக்கும் சூழ்நிலையைவிடக் கொடிய சூழ்நிலை பொதுநலத் தொண்டர்களை அச்சுறுத்திக்கொண்டிருந்த அக்காலத்தில், அவர் அவ்வாறு துணிந்தார். நாட்டு மக்களின் நல்வாழ்விற்காக ஒரு பத்திரிக்கையைத் தொடங்கித் திறம்பட நடத்துவது என்பது செயற்கருஞ்செயல். செய்த பெரியார் திரு. லட்சுமி நரசிம்முலு, அதன் விளைவாக அவருக்கு நன்மையைவிடத் தீமையே