பக்கம்:இருபெருந்தலைவர்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரு பெருந்தலைவர் அதிமாய்க் கிடைத்தது. அது காரணமாக அவர் அடைந்த இழப்புகளுக்கோர் அளவில்லை. அவர் நடத்திய இளம்பிறை'யைக் கண்டவர்கள் அப்பத்திரிகை எவ்வளவு வாதத்திறமையோடும் பகுத்தறிவோடும் கட்டுரைகளை வெளியிட்டது என்பதையும் எவ்வளவு அமைதியோடும் பெருந்தன்மையோடும் அப்பத்திரிகையில் கருத்துக்கள் வெளியிடப்பட்டன என்பதையும் ஒரு நாளும் மறக்க முடியாது. அந்தப் பத்திரிகை வாயிலாக நாட்டு மக்களின் அர சியல்-சமூக உரிமைகள் பல-அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்து காப்பாற்றப்பட்டன என்பதில் எனக்குச் சிறிதும் ஐயமில்லை. சென்னைக் சட்ட மன்றத்தில் மேல்சபைக்குத் திரு. லட்சுமி நரசி்முலு நியமனம் பெற்ற போது நாட்டு மக்களுக் கிடையே நாநாவிதக் கருத்து வேறுபாடு இருந்த போதிலும், திரு. லட்சுமி நரசிம்முலுவே நம் பிரதி நிதியாய் இருப்பதற்கு மிகவும் தகுதி வாய்ந்த பெருந்தலேவர் என்ற எண்ணம் மோலோங்கி நின்றது. அவர் மறைந்த போது எல்லோரும், ஈடு செய்ய முடியாத இழப்பு' என்றே எண்ணி மனம் கலங்கினர். அச்சமயத்தில் திரு. லட்சுமி நரசிம் முலுவின் நினைவை நிலை நாட்ட நடைபெற்ற கூட்டத்தில் ஒரு முடிவு செய்யப்பட்டது. அதன்படி பொருள் திரட்டி, இந்தப் பச்சையப்பர் மண்டபத்தில் அவரது திருவுருவப் படத்தைத் திறந்து வைக்க வேண்டுமென்றும் மாநிலக் கல்லூரியில் அவர் பெயரால் வடமொழிப் படிப்புக்கு ஒரு சேம நிதி அமைக்க வேண்டுமென்றும் உறுதி செய்யப்பட்டது. இந்த வகையில் அவர் நினைவை நிலைநாட்ட நல்லன்பர்கள் ஏராளமாகப் பொருளுதவி