பக்கம்:இருபெருந்தலைவர்.pdf/49

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரு பெருந்தலைவர் சாங்கத்திற்கு எழுதினர். தம் ஆதரிப்புக் குறிப்பில் திரு. முதலியாரின் தெளிந்த அறிவையும் ஒழுக்க உறுதியையும் அவர் போற்றிப் புகழ்ந்திருந்தார். திரு. முதலியார் அவர்கள் 1877ல் திருச்சி மாவட்ட முனிசீபாக நியமனம் பெற்றார் தம்பதவியில் சிறந்த முறையில் பணியாற்றிய திரு. முதலியார் நடுவு நிலைமைக்கும் ஒருதலைப்படாப் பண்பிற்கும் சிறந்த எடுத்துக்காட்டாகும் புகழ் பெற்ரறார் சமன் செய்து சீர்துரக்கிச் சிறந்த முடிவு கூறும் தம் துறையில் எவ்வளவு பெரியவரும் தலையிடுவதைத் திரு. முதலியார் எந்த நாளிலும் விரும்பியதில்லை. ஒரு முறை தமக்கு மிக வேண்டிய பெரியவரிடமிருந்து கடிதம் பெற்று வந்த ஒரு கட்சிக்காரரைத் திரு. முதலியார் அன்போடு உபசரித்துத் தம் வாகனத் திலேயே நீதி மன்றத்திற்கும் அழைத்துச் சென்றார் ஆனால் அக்கட்சிக்காரரின் வழக்குப்பற்றிய முடிவைத் தாம் கூறியதும் அக்கட்சிக்காரர் நீதி மன்றத்தில் எங்கிருக்கிறார் என்பதையும் தெரிந்துகொள்ள முடியவில்லை ! திரு. முதலியார் அவர்கள் புகழ் வாய்ந்த நீதிபதியாய் விளங்கினர். ஆயினும், முழுநேரப் பொதுமக்கள் ஊழியராய் விளங்க வேண்டும் என்ற ஆர்வம் படைத்திருந்த திரு. முதலியாருக்கு அரசாங்க அலுவல் பிடிக்கவில்லை. அந்நாளில் புதுக்கோட்டைத் திவானாய்ப் புகழுடன் விளங்கிய சேஷைய சாஸ்திரியார் திரு. முதலியார் அவர்களின் புகழைக் கேட்டுணர்ந்து விம்மிதமுற்றார் நான் சேலம் இராமசாமி முதலியாரை நேரிற்காணும் பேற்றினைப் பெறவில்லை என்றாலும் அவர் பண்புகளையயும், நடுவுநிலை வழுவாத் திறனையும், ஒழுக்க