பக்கம்:இருபெருந்தலைவர்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதற்பெருந்தமிழர்

மேம்பாட்டையும், மக்களிடம் பெற்றுள்ள மதிப்பையும் நன்கு அறிவேன். அவரை உருவாக்கியமைக்குச் சென்னை சீனப் பல்கலைக்கழகமே பெருமை கொள்ளலாம் என்று எப்போதும் கருதியிருக்கிறேன். மேலும், அவர் தம் பதவியில் படிப்படி யாக உயர்வாராக!' என்று ஒரு முறை பாராட்டினார் ஆனால் சேவையை சாஸ்திரியார் எண்ணத்தையும் விஞ்சிய திண்ணிய நிலைமையைப் பெற்றார் சேலம் முதலியார். தம் பதவியை இவர் இரு முறை விட்டு விலகினர். 1882-ல் இறுதியாக இவர் ராஜி காமாவை அரசாங்கம் ஏற்றது. பின்னர்ச் சென்னை சேர்ந்து தனிப்பட்ட முறையில் வழக்கறிஞராய்த் தொழிலாற்றினுர் திரு. முதலியார். அப்போது இவர் காட்டிய அறிவின் மேதையையும், ஒழுக்கச் சிறப்பையும் உணர்ந்து போற்ருத அறிஞரில்லை சட்டம் இவருக்கு வருவாய் தரும் தொழிலாய் இல்லை. மனித குலத்தை உயர்த்தும் சாத்திர மாகவே அது விளங்கியது. அதன் பயனுக இவர் புகழ் பெற்ற லா ஜர்னல் பத்திரிகையை ஆரம்பித்து, 1890-ஆம் ஆண்டு வரை அதன் தலைமை ஆசிரிய ராய் விளங்கினர். . .

திரு, முதலியார் அவர்கள் அங்காளில் பச்சையப்பர் அறநிலையத்திலும், சென்னைப் பல்கலைக் கழகத்திலும் உறுப்பினராய் அமைந்து ஆற்றிய தொண்டுகள் மதிப்பிடற்கரியன ; கல்வித் துறையாளர் மறவாது போற்றி வணங்குதற்குரியன. திரு. முதலியார் அவர்கள் அரசியல் வாழ்வின் தனிச்சிறப்பை இக்கட்டுரையின் இறுதியில் ஆராயு முன் தமிழிலக்கியத்தின்பால் இவர் கொண்டிருந்த