உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இருபெருந்தலைவர்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரு பெருந்தலைவர் தனி அன்பையும், அத்துறையில் நிகரற்ற புலவராய் விளங்கிய இவர் பேராண்மையையும் குறிப்பிடாமலிருத்தல் அறமாகாது. காலஞ் சென்ற அழியாப் புகழ்ச் சாமிநாதய்யர் பழந்தமிழ் நூல்களைப் பதிப்பிக்கும்படி வழிகாட்டிய தனி முதல்வர், சேலம் இராமசாமி முதலியார் அவர்களை இவ்வுண்மையை மிக்க நன்றியுணர்ச்சியோடு டாக்டர். சாமி நாதய்யர் என் சரித்திரத்தில், மிக விரிவாகப் பல இடங்களில் மனமார எழுதியுள்ளார். இன்றும் அந்த நூலைப் படிப்பார் அதில் ஐயரவர்களைப் பண்டைத் தமிழ் நூால் பதிப்பாசிரியராக்குவதற்கு முதற் காரனமாயிருந்தவர் என்ற குறிப்புடன்ன் திரு. இராமசாமி முதலியாரின் தெய்வகலம் கனிந்த திரு உருவப்படம் திகழக் காணலாம். அப்படத்தைச் சுற்றி ஐயர் அவர்களின் பழைய கநினைவுகள் ஒளி விசக் கானலாம். சேலம் இராமசாமி முதலி யாசைப்பற்றி இறவாத புகழுடைய ஐயரவர்களின் அட்சர இலட்சம் பெறும் நிறைவான வருணன்னை களில் முக்கியமான பகுதிகள் வருமாறு : காலேஜ் வேலையைப் பார்த்துக்கொண்டு விட்டுக்கு வரும் மாணாக்கர்களுக்கு ஒழிந்த நேரங்களில் பாடம் சொல்லிக்கொண்டும் பொழுது போக்கி வந்தேன். அச்சமயம் அரியலுரிலிருந்து சேலம் இராமசாமி முதலியார் என்பவர் கும்பகோணத்துக்கு முன்போக மாற்றப் பெற்று வந்தார். அவரிடம் என் நல்லூழ் என்னைக் கொண்டு போய் விட்டது. அவருடைய நட்பினால் என் வாழ்க்கையில் ஒரு புதுத் துறை தோன்றியது; தமிழிலக்கியத்தின் விரிவை அறிய முடிந்தது. அந்தாதி, கலம்பகம், பிள்ளைத்தமிழ், உலா, கோவை முதலிய பிரபந்தங்களிலும் புராணங்களிலும் தமிழின்பம் கண்டு மகிழ்வதோடு நில்லாமற் பழமையும் பெருமதிப்