உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இருபெருந்தலைவர்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதற்பெருந்தமிழர் புமுடைய தண்டமிழ் நூல்களிற் பொதிந்து கிடக்கும் இன்ற மிழியற்கையின்பத்தை மாந்தி நான் மகிழ்வதோடு, பிறரும் அறிந்து இன்புறச் செய்யும் பேறு எனக்கு வாய்த்தது.

    முதலியார் சேலத்தில் ஒரு பெரிய மிட்டா ஜமீந்தார் பரம்பரையினர் ; இளமையிலையே பேரறிவு படைத்து விளங்கினார் தமிழிலும் இசை ஞானத்திலும் வட மொழியிலும் பழக்கமுள்ளவர். கும்பகோணத்தில் வேலை பார்த்து வந்த காலத்தில் இவருடைய திறமை ஓரளவு வெளிப்பட்டு ஒளிர்ந்தமையால் இவரைத் தக்க கனவான்கள் சென்று பார்த்துப் பேசிவிட்டு வருவார்கள், கும்ப கோணத்துக்கு நூதனமாக உத்தியோகஸ்தர்கள் வந்தால் அவர்களிடம் மனிதர்களை  அனுப்பிப் பார்த்துவரச் செய்வதும், குரு பூஜை முதலிய விசேஷ தினங்களில் மடத்திற்கு வரவேண்டு மென்று அழைக்கச் செய்வதும் திருவாவடுதுறை மடத்து வழக்கம். சேலம் இராமசுவாமி முதலியா ருடைய கல்வியறிவையும் பெருந்தன்மையையும் கேள்வியுற்ற சிசுப்பிரமணிய தேசிகர் இவரைப் பார்த்து வரும்படி காறுபாறு தம்பிரானையும் அவருடன் வேறு சிலரையும் அனுப்பினர். தம்பிரான் பரிவாரங்களுடன் சென்று முதலியாரைக் கண்டு பேசிக்கொண்டிருந்தார்.

இராமசுவாமி முதலியார் திருவாவடுதுறை மடத்தின் பழம்பெருமையை நன்குனர்ந்தவராத லின், தம்பிரானுடன் சம்பாஷணை செய்து வரும் போது மடத்து கிருவாகத்தைப்பற்றிப் பேசுவதோடு நில்லாமல், கல்வி சம்பந்தமாகவும் விசாரிக்க ஆரம்பித்தார் ; மடத்தில் தமிழ்க் கல்வியபிவிருத் திக்கு என்ன செய்கிறார்கள் வித்துவான்களாக