பக்கம்:இருபெருந்தலைவர்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 இரு பெருந்தலைவர் திரு. இராமசாமி முதலியாரின் மறைவால் தமிழகத்திற்கும் பாரத நாட்டிற்கும் ஏற்பட்ட இழப்பு அன்றும் இன்றும் என்றும் ஈடு செய்ய ஒண்ணுதது. திரு. முதலியாரின் மீளாப்பிரிவால் இந்து சமுதாயம் அப்பழுக்கற்ற ஒரு பெருந்தகையை இழந்தது. தேசபத்தர் உலகம் தலே சிறந்த ஒரு பேரறிஞரை இழந்தது. தமிழ் அறிவாளர் உலகம் தன்னிகரற்ற ஒரு மேதையை இழந்தது. அனேத்திற்கும் மேலா கப் பாரத அன்னே தன் மணி முடியில் போற்றிப் புனேந்திருந்த அரியதொரு தமிழ் இரத்தினத்தை இழந்தாள். சேலம் இராமசாமி முதலியார் மறைந்து 66 ஆண்டுகட்கு மேலாகின்றன. ஆயினும் அவர் கினே வைத் தமிழகம் தக்கவாறு போற்ற மறந்துவிட்டது. மொழி வழி ஆட்சி நடத்தும் பேறு பெற்றுள்ள இன்றைய த மி ழ க ேம னு ம் அக்குறை களேயத் துணியுமோ? திரு. முதலியார் பிறந்த சேல மாநகரி லும், அவர் வாழ்ந்து பெருமை பெற்ற சென்னேமா நகரிலும் அவர்கட்கு நன்றியுணர்ச்சியுடைய தமிழ் மக்கள் தக்க கினேவுச் சின்னம் எழுப்புதல் வேண்டும். கம் இனத்தின் பெரியோர்களே நாமே போற்ரு விடின், வேற்றினத்தார் போற்றுவது எங்ஙனம் ? வாழ்க திரு. இராமசாமி முதலியாரின் வான்புகழ்!