பக்கம்:இருளடைந்த பங்களா.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
11

போலீஸார் வந்து, கவனிக்க வேண்டியவைகளை எல்லாம் சரிவரச் செய்து முடித்து, மனித உடலைக் கரையேற்றியதும் அது ஒரு பெண்ணின் சவம் என்று புரிந்தது. ‘ஆங். பொம்பிளையா!’ என்ற அதிர்ச்சி கும்பலை வேடிக்கை பார்க்கப் புடதியைப் பிடித்து நெருக்கித் தள்ளவே, தடியடிப் பிரயோகம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் போலீசுக்கு ஏற்பட்டது.

‘ஆமா. பொம்பிளைதான். இவளை நான் எங்கேயோ பார்த்த மாதிரித் தோணுது’ என்று தலையைச் சொரிந்தார் ஒரு பிரதர். ‘அன்றைக்கொரு நாள் காரிலே பார்த்ததேனே ஒரு பியுட்டி, அவ முகம் போலே இருக்குது’ என்று சொல்லலாமாே வேண்டாமா எனத் தலையைச் சொரிந்தார் அவர். ‘கண்டவர் விண்டிலர்’ என்ற தத்துவத்தைக் கடைப்பிடிப்பதே மெத்தப் புத்திசாலித்தனம் என்றும் முடிவு செய்த மெளனத்தில் ஆனந்தமும் காணத் துணிந்தார் தோழர்.

எனினும் அவர் மனம் மாத்திரம் குறுகுறுத்துக் கொண்டுதாணிருந்தது; ஒருவேளை இது அவளாகவே இருக்குமோ? அப்படியானால், அவள் எப்படிச் செத்தாள்? கொலை செய்து காணல் புதருக்குள் வீசி எறிந்திருப்பாா்களோ? ஏன்?...படுபாவிகள் அன்பாக அழைத்து வந்து எதற்காக அப்படிச் செய்யத் துணிந்தாகள்?

இவையெல்லாம் அவரது அறிவுக்குத் தெளிவாகாப் பிரச்னைகள் இத்தகைய புதிர்கள் பல அவ்வூராரின் நினைவுப் பரப்பிலே குமிழிட்டுக் கொப்புளித்தன. அவரவா் மனப்பக்குவத்திற்கேற்ப விளக்கமும் கூறிக் கொண்டனர்.

‘நம்மூரு நாணல்காட்டுப் பிசாசு அறைஞ்சு கொண்ணுயிருக்குமய்யா. உடலை எப்படிக் கொரக்கக் கொரக்கக் கொண்டு போயிருக்கு பார்த்திரான்னேன்! ஈரவேட்டியைத்