பக்கம்:இருளடைந்த பங்களா.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

15

அவரைப் பத்தி இஷ்டம் போல் வம்பளந்ததற்காக மனமாற வருத்திய நல்ல மனிதர்கள் சிலரும் இல்லாமல் போகவில்லை அந்தக் கூட்டத்திலே.

அவர் பெயர் ருத்ரமூர்த்தி என்த உண்மை பரவி எல்லோருக்கும் தெரிந்து விட்டது. 'நல்ல மனிதருக்கு இப்படி ஒரு பெயரை வைத்திருக்க வேண்டியதில்லை. அவரைப் பெற்றெடுத்த பாக்கியவான்கள்' என்று குறைப்பட்டனர் சிலர் இவருக்கு ஏன் தான் டேஞ்சர் லைட் மாதிரிப் பளிச்சிடுகிற சிவப்புப் பூவிலே மோகம் விழுந்ததோ தெரியவில்லை என்று அங்கலாய்த்தார்கள் சிலர்.

உலகம் பலவிதம்! அந்த உலகத்தையே அலட்சியமாக மதிப்பவர் போல நடந்து கொண்டார். அவர். என்றாலும், விழா நிகழ்ச்சிகளின் இறுதிக் கட்டம் வரை பொறுமையுட விருந்தார் அவர். நாடகத்தைக் கூடக் கண்டு மகிழ்ந்தார். அதில கதாநாயகியாக பிடித்த குமாரி பவானிக்கு அவரே தங்கப் பதக்கம் ஒன்று பரிசளித்து, அவளது திறமையை வெகுவாகப் பாராட்டிப் பேசினார். எல்லோரிடமும் விடை, பெற்றுக் கொண்டு தமது காரிலேறிப் போய்ச் சேர்ந்தார் அவர்.


4

'ரெண்டுங்கெட்டான்புரம்' அதிவிசேஷ அற்புதப் பரபாப்புச் சம்பவங்கள் நிகழும் அரங்கமாகி விட்டதாகத் தெரிய வந்தது. மிகக் குறுகிய காலத்திலே அதற்கு அந்தச் சிறப்பு வந்து சேர்ந்தது. ஆனால், அந்த ஊரிலுள்ள அப்பாவி ஜனங்கள் அதற்காகப் பெருமைப்படவில்லை. அர்த்தமற்ற கலவரத்தையே வளர்த்தார்கள். காரணத்தைக் கண்டு பிடிக்கும் வகை தெரியாது திகைத்தனால் அவர்களது கலக்கம் அதிகமாயிற்றே தவிரக் குறையவில்லை.