பக்கம்:இருளடைந்த பங்களா.pdf/26

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
24

எனக்குத் துாக்கம் கண்ணைக் கவ்வுவது போலிருந்தது. எதோ ஒரு வாசனை அலை அலையாக வந்து நாசியைத் தாக்கி என்னை உணர்விழக்க வைத்தது என்றே நினைக்கிறேன். அப்பொழுது அத்த கெடி அவர் கோட்டில் குத்தியிருந்த சிவப்புப் பூவிலிருந்து வருவதாகத்தான் நினைத்தேன். இப்பொழுது, அவர் கைக்குட்டையில் மயக்க மருந்து தெளித்திருப்பாரோ என்ற சந்தேகம் எனக்கு. கொஞ்ச நேரம் எனக்கு எதுவுமே புரியவில்லை. நான் கண்ணைத் திறந்து கவனித்தபோது எங்கோ புது இடத்தில் இருப்பதை அறிந்தேன். என் பயம் அதிகமாயிற்று. நான் ஒரு சோபாவில் சாய்ந்து கிடந்தேன். மிக விசாலமான அறை அது. ஆனால் அறை முழுவதையும் ஒளியுறுத்தப் போதுமான விளக்குகள் எரியவில்லை. மெழுகுவர்த்திகள் எரித்து ஒளி கக்கும் ஷேட் லைட்டுகள் சில இருந்தன. அறை நடுவே ஒரு மேஜை யிருந்தது. பெரிய வட்ட மேஜை, அதற்கு நேர் உயரே அழகான பூ வேலைப்பாடுகள் நிறைந்த சாவிளக்கு ஒன்று தொங்கியது. கண்ணாடித் தொங்கட்டான்கள் நிறைந்து, பெரிய ஊமத்தம்பூக்கள்போல் கண் ஆடிக் கிண்ணங்கள் கிளைகிளையாய் மலிந்திருக்க, ஒவ்வொன்றினுள்ளும் ஒரு மெழுகுவர்த்தி எரியுமே, அந்த விளக்குதான். அதில் பல கிண்ணங்களில் மெழுகுதிரி எரிந்து கொண்டிருந்தது. எல்லாக் கிண்ணங்களும் ஒரே சிகப்பு நிறமாகயிருந்தன. அதில் தொங்கிய குண்டுகளும் நீண்ட கண்ணாடிப் பட்டைகளும் கூடச் சிவப்பாகத்தானிருந்தன. அந்தச் சரவிளக்கு உபயோகப் பொருள் என்பதைவிட , அலங்காரப் பாத்திரம் என்ற தன்மையில்தான் அதிகமாகப் பயன்பட்டதாக எனக்குத் தோன்றியது. - மேஜை மீது ஒரு கண்ணாடிக் கூஜாயிருந்தது. அதன் நிறமே சிவப்பா, அல்லது அதில் ஊற்றப்பட்டிருந்த நீரில் சிவப்புக் சாயம் கலக்கப்பட்டிருந்ததா என்று என்னால் தீர்மாணிக்க முடியவில்லை. அதில் மூன்று புஷ்பங்களிருந்தன. அவர் கோட்டில் சொருகியிருந்தாரே அதே மாதிரி, ஆனால்