பக்கம்:இருளடைந்த பங்களா.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

 நளினப் பெண்கன் போல அல்லவா ஆடி அசைத்து ஒயிலாகக் காட்சி தருகின்றன. சிவந்த செடிகளின் செக்கச் சிவந்த ரத்த வண்ணப் பூக்களைப் பாருங்கள். ஆயுள் காலம் பூராவும் அவற்றையே பார்த்துக் கொண்டிருக்கலாம் என்ற ஆசை உண்டாகுமே! நான் பயிர்ச் சோதனைகளிலும், பலவிதப் புஷ்பப் பரிணாம ஆராய்ச்சிகளிலுமே என் வாழ்வைக் கழித்து வந்திருக்கிறேன். அழகிய பெண்களை விட உயர்ந்தவை செடிகள் என்று தான் நான் சொல்லுவேன். அழகியரின் சிரிப்பைவிட, அவர்களது முககாத்தியைவிடச் சிறந்தவை - இனியவை - புஷ்பங்கள் சான்று செல்வேன்...' இன்ஸ்பெக்டர் குறுக்கிட்டார் :நீர் என்ன வேண்டுமானாலும் சொல்லும், உம்மை யாரும் தடை செய்யமாட்டார்கள். அதிகப்படி உளறி ஆபத்து விளைவித்தால் உம்மைப் பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் தள்ளி விடுவார்கள். ஆனால் நீர் பேச்சோடு நிற்கவில்லையே !பேய்த்தன வேலைகள் செய்திருக்கீறீரே.எட்டுக் கொலைகள்; ஒரு யுவதியைக் கொலை செய்ய முயன்ற குற்றம் வேறு. அதற்கு என்னய்யாசொல்கிறீர் ? வெள்ளி மயிர்கள் குச்சிகுச்சியாய் நின்ற மண்டையைத் தன் கையினால் தடவினார் ருக்ரமூர்த்தி. சொன்னர் : நான் அவர்களைக் கொல்லத் திட்டமிட வில்லை. அழகிகளின் ரத் கம்தான் எனக்குத் தேவை. அவர்களது உடலோ உயிரோ எனக்கு எவ்வகையிலும் பிரயோசனப் படுவதில்லை. அவர் கள் பலவீன ஜத்துக்கள் என்று நிருபித்து விட்டார்கள் ; செத்துப் போனார்கள் !கன்றுகளுக்கும் மனிதர்களுக்கும் நிறைய நிறையப் பால கொடுத்தாலும் பசுமாடுகள் நன்றாக வாழவில்லையா ? இவர்கள் பசுக்களை விடப் பயனற்ற ஜீவன்கள் ! ஒரு கண்ணாடி ஜாடியில் ரத்தம் எடுத்தால், செத்துப் போகிறார்கள் இவர்களைச் சாக அடிக்க வேண்டுமென்ற நோக்கமே எனக்குக் கிடையாது. ரத்தம் எடுத்த பிறகு இவர்கள் உலவத் தயாராகயிருந்தால், நான் ஒவ்வொருத்