பக்கம்:இருளடைந்த பங்களா.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

5

என்றே எண்ணத் தூண்டும் தோற்றம். அழகான முகப்புடன் விளங்கிய அக் கட்டிடத்தினுள் ஊர்க்காரர்கள் நுழைந்து பார்க்க ஒரு சக்தர்ப்பம் கூடக் கிட்டவில்லை.ஆகவே, பங்களாவின் உட்புறம் எப்படியிருக்கும், எத்தனை அறைகள், அங்கு என்னென்ன அற்புதங்களைக் காணலாம் என்பது எதுவும் அவர்களுக்குத் தெரியாது.

பங்களாவின் முன் பக்கம் பெரிய இரும்பு கேட்டும், சுற்றிலும் உயர்ந்த காம்பவுண்டுச் சுவர்களும் சேர்ந்து பங்களாவின் மர்மச் சூழ்நிலையாக உதவின. ஜமீன்தார் எவரோ கட்டிய பங்களா; அவரது ஆசை நாயகியை அடைத்த வைத்துக் கிளி போல் காப்பதற்காக அமைக்கப்பட்டது : அங்கு கூட ஒரு கள்ளக் காதலன் வந்து போக அவன் ஏற்பாடு செய்து விட்டாள்; அதனால் ஆத்திரமடைந்த ஜமீன்தார் அவளைக் கொன்று போட்டார்: அவள் பிசாசாக மாறி நன்கு வாழ்கிறாள் என்று சிலர் சொல்வது உண்டு.

இதற்கு ஒரு 'பாடபேத'மும் உண்டு. ஜமீன்தாரின் ஆசைநாயகி கொலை செய்யப்படவில்லை; அவளாகவே 'நாணிட்டு நின்று' செத்துப் போனாள்; அப்படிச் செத்தவள் பிசாசாக சுற்றித் திரியாமல் என்ன செய்வாளாம். இது பலரது சவால்.

நாம் எதையும் ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லே. அந்த பங்களாவிற்கு ஊராரின் பேச்சு மர்மச் சாயம் பூசி வந்தது என்று அறிந்து கொண்டால் போதும்.

சிலர் ஏதோ குஷியில் பெரிய பெரிய கட்டிடங்களாகக் கட்டிப்போட்டு விடுகிறார்கள். அப்புறம் வருஷந்தோறும் வெள்ளையடித்து அதைச் சுத்தமாக வைத்திருக்கும் சிரத்தை கூட இல்லாதவர்களாகி விடுகின்றனர். காலப் போக்கிலே பழுது பார்க்கவும், பளிச்சிடும் சோபை தரும் வகையில் சுண்ணாம்பு பூசவும் வக்கற்றுப் போகிறார்கள். இதனாலெல்லாம் பல கட்டிடங்கள் பாசிபடிந்த பழமைத்