பக்கம்:இருளடைந்த பங்களா.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

தோற்றம் பெற்று அழுமூஞ்சித்தனமாக காட்சி தருகின்றன.

'ரெண்டுங்கெட்டான்புரம்' ஊரின் ஒரு மூலையிலே நின்ற பெரிய பங்களாவும் காலப்பாசம் படிந்த சமாதி போல்தான் காட்சியளித்துக் கொண்டிருந்தது. அதை ஒரேயடியாக அடைத்துப் போட்டு விட்டதனால் அதற்கு இருளடைந்த தன்மை படித்திருந்தது. அதை வெளவால்களும் குருவிகளும் சுகவாச ஸ்தலமாக எவர் அனுமதியும் பெறாமலே உரிமை கொண்டாடி மகிழ்ந்தன.

வருஷக் கணக்கில் அடைத்துக் கிடந்த அந்த பங்களாவிற்கு சாப விமோசனம் பிறந்ததென்றால் அது பரபரப்பிற்குரிய செய்திதானே! அங்கு குடியிருக்க வந்த தைரியசாலி யார் என்று அறியும் ஆவல் பலருக்கும் ஏற்பட்டது இயல்புதான்!

அந்த ஆசையும் இயல்பும் வளர்ந்தன. பங்களாவில் நிகழ்ந்த புதுமைகளை அறிய அறிய கட்டிடம் பழுது பார்க்கப்பட்டது. சுவர்களுக்கு வெள்ளையடித்து, கதவுகளுக்கும் ஜன்னல்களுக்கும் வர்ணம் பூசி அழகுபடுத்தினார்கள். அழுது வடியும் முளி மாதிரியிருந்த தோற்றம் இத்தகைய மாறுதல்களினால் கண்கவரும் மேக்கப் சுந்தரியின் பகட்டுக் தனம் பெற்றது. பங்களாவுக்குப் போகும் பாதை சரிவர இல்லாதிருந்தது. அதைச் சரிப்படுத்தி கார் போய்வர வசதியான நல்ல ரோடாக மாற்றி வைத்தார்கள். சுற்றிலும் குப்பைக் காடுகளாக விளங்கிய தோப்புக்களைச் சுத்தப்படுத்தினார்கள்.

இவ்வேலைகளைச் செய்த நபர்களிடம், 'யார் இந்த பக்களாவிற்கு வரப்போகிறார்கள்?' என்று கேட்கப்பட்ட கேள்விகளுக்கெல்லாம் ஒரே பதில்தான் கிடைத்தது. 'அது எங்களுக்குத் தெரியாது. யார் வந்தால் என்ன! எங்களுக்கு வேண்டியது கூலி. அது தாராளமாகக் கிடைக்