பக்கம்:இருளும் ஒளியும்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 இருளும் ஒளியு ம்

"ஆமாம் அத்தான்்! புராணத்துச் சாவித்திரிக்கும் இவளுக் கும் ரொம்ட வித்தியாசம் இருக்கும். அப்பா. அம்மாவுக்கு ரொம்ப செல்லப் பெண் குணம். பாட்டி ஒருத்திக்கு அருமைப் பேத்தியாம்! நாலு பேருடன் பிறந்தவளாக இருந்தாலும், தனித் காட்டு ராணி மாதிரி அதிகாரம் செய்வாளாம்!'"

லரஸ்வதி, குறும்புப் புன்னகையுடன் தலைப் பின்னல் கையில் முறுக்கிக்கொண்டே ரகுபதியைப் பார்த்து இவ்விதம் கூறிஞள்.

'ஒஹோ! உனக்கு எல்லாம் தெரிந்திருக்கிறதே. பரவி" நான் சொல்கிறேனே என்று கோபித்துக்கொள்ளாதே. நி சங்கிதம் பயில்...த விட்டுவிட்டு, ஏதாவது பத்திரிகாலயத்தில் வேலைக்குச் சேர்ந்தாயாளுல், இந்த மாதிரி சரடு விடுவதில் அர்த்தம் உண்டு!" என்ருன் ரகுபதி சிரித்துக்கொண்டே.

"ஐயையோ, சரடா? இல்லை. அத்தான்், நிஜமாகத்தான்் சொல்லுகிறேன். பெண்ணின் தகப்பளுரே அத்தையிடம் தன் பெண்னைப்பற்றிய பிரதாபங்களை வாய் ஓயாமல் அளந்துகொண் டிருந்தார்!" என்ருள் ஸரஸ்வதி.

அவர்கள் இருவரும் மேற்கொண்டு தொடர்ந்து வம்பளப்ப தற்கு முடியாமல், அடுப்பங்கரையிலிருந்து அதிகாரத்துடன் ஒரு குரல் அவர்கள் இரு வரையும் அ_ட்டியது. -

"ஸ்ரஸா பேச ஆரம்பித்தால் ஒய மாட்டாயே நீ? அவனுத் தான்் என்ன? பாட்டுப் பைத்தியம்: பேச்சுப் பைத்தியமும் கூட." என்று அத்தை ஸ்வர்ணம் அதட்டிள்ை.

வரஸ்வதி மாடிப் படிகளில் மெதுவாக இறங்கிளுள். சிந்தை அறிந்து வாடி, செல்வக் குமரன்-சிந்தை அறிந்து வாடி’ என்று பாடிக்கொண்டு. அத்தான்ைப் பார்த்துக் கலகலவென்று சிரித்தாள் அந்தப் பெண் ஸரஸ்வதி. சிரிப்பில் சேர்ந்துகொண்ட ஸ்வர்னம், லரஸ்வதியின் அருகில் வந்து, வாஞ்சையுடன் அவள் தலையைத் தடவிக்கொடுத்தாள். பிறகு, "ஸ்ரஸ்"! நீ என்ன தான்் உன் அத்தான்ுடன் கபடமில்லாமல் பழகினலும், பிறர் தவருக நினைப்பார்கள், அம்மா. போகிற இடத்திலெல்லாம் நீ பேசாமல் இருக்கிறதில்லை. இந்தக் காலத்தில் நல்லது எது, கெட்டது எது என்பதை யார் ஆராய்ந்து பார்க்கிரு.ர்கள்? நான் சொல்கிறேனே என்று கோபித்துக்கொள்ளாதே, வரலா!' என்ருள் ஸ்வர்ணம்.

ஸரஸ்வதி. அன்புடன் அத்தையை ஏறிட்டுப் பார்த்தாள்.