பக்கம்:இருளும் ஒளியும்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 இருளும் ஒளியும்

அன்று காலைப் பத்திரிகையில் வெளியாகி இருந்த செய்தியும் அதுவேதான்். விழாவில் ஸரஸ்வதி கச்சேரி செய்யும் புகைப் படம், பிரமாதமாக வெளியாகி இருந்தது. ஒலிபெருக்கியின் முன்பு புதுப் பெண் ஒருத்தி நின்று தன் பவள வாய் திறந்து பாடிக்கொண் டிருந்தாள். ரகுபதி, தலைவரைக் கைகூப்பி வணங்கி அழைத்துவரும் காட்சி மற்றொரு பக்கத்தில் வெளியாகி இருந்தது. சாவித்திரி, படங்களேயே கண் இமைக்காமல் பார்த்துக்கொண் டிருந்தபோதுதான்் பாட்டி வந்து மேற்கூறிய விதம் தெரிவித்தாள். பத்திரிகையில், நடந்தது நடந்தபடி வெளியாகி இருந்தது. அத்துடன் கூட்டியோ குறைத்தோ செய்திகளை வெளியிடும் சாமர்த்தியம் அதைக் கவனித்த நிருபருக்கு இல்லை! ஆனால், பாட்டிக்கு அந்தச் சாமர்த்தியம் அபாரமாக அமைந்திருந்தது. திறந்த வாய் மூடாமல் பாட்டை ரகுபதி ரஸித்தான்் என்று கூறினுள். மனம் சரியில்லாமல் ரகுபதி விழா மண்டபத்துக்குள்ளே பெரும்பாலும் நிற்கவில்லை. இடையிடையே ஸரஸ்வதி அபூர்வ சங்கதிகளைப் பாடும் போதோ, ஆலாபனம் செய்யும்போதோதான்் அவன் சற்று நின்று அவைகளே ரவித்தான்். பாதிக் கச்சேரியில், மனக் கோளாறினல் ஏற்பட்ட அயர்வைத் தாங்காமல் காரியதரிசி யிடம் பொறுப்பை விட்டுவிட்டு வீட்டுக்கு வந்துவிட்டான். ஒன்றுக்குப் பத்தாகப் பேசுவது சிலருடைய இயல்பு. கண்ணுல் கண்டதை வெளியிடவே சிலர் தயங்குவார்கள்.

பொங்கிவரும் அழுகையைச் சமாளிக்க முடியாமல் சிறிது நேரம் திகைத்துப்போய்க் கண்களில் பெருகும் நீருடன் உட்கார்ந்திருந்தாள் சாவித்திரி. ஒரு கrணம் அவளுக்கு கணவனிடம் கோபித்துக்கொண்டு வந்ததே தவருே என்று கூடத் தோன்றியது. தவறு என்ன? நான் அங்கே இருக்க வேண்டும் என்று யார் அழுதார்கள்?' என்று சற்று உரக்க வாய்விட்டுப் பேசிக்கொண்டாள்.

என்ன சொல்லிக்கொள்கிருயடி அம்மா?' என்று கேட்டுக் கொண்டே பேத்தியின் அருகில் வந்து நின்று அவள் முகத்தை உற்றுக் கவனித்தாள் பாட்டி. பிறகு, 'நன்ருக இருக்கிறதே நீ இப்படி மாலைமாலையாகக் கண்ணிர் வடிக்கிறது? இப்படி அழுதால் உடம்புக்கு ஆகுமாடி சாவித்திரி? அசடுதான்் போ' என்று கூறிஞள்.