உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இருளும் ஒளியும்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

தங்கத்துடன் ரகுபதி

அடுத்தநாள் அலமுவும், தங்கமும் ஊருக்குப் புறப்படுவதாக இருந்தார்கள். வீட்டைச் சுற்றிச் சுற்றி வளைய வரும் தங்கம் ஊருக்குப் போய்விட்டால் வீடு வெறிச்சோடிவிடும். தெருவில் முத்து முத்தாக யார் கோலம் போடுவார்கள்? பூஜைக்கு விடியற். காலை யார் மலர் கொய்து வைப்பார்கள்? ஸரஸ்வதி அவ்வேலை களைச் செய்தாலும், தங்கம் செய்வதில் தனியானதொரு அழகைக் கண்டு ரசித்தான்் ரகுபதி. 'அத்தான்்! உங்களுக்கு மிளகு வடை என்றால் ஆசையாமே' என்று கரகரவென்று. அந்தப் பலகாரத்தைச் செய்து தட்டில் வைத்துக் கொண்டுவந்து வைத்தாள் தங்கம்,_ஒரு_நாள். எல்லோருடைய மனதையும். தான்் கவர வேண்டும்; எல்லோருக்கும் தான்் இனியவளாக நடந்துகொள்ள வேண்டும் என்கிற ஆசையுடன் அனைவரும். மெச்சும்படியாக நடந்துகொண்டாள் அவள்.

'பாவம்! நல்ல் இடமாகப் பார்த்துக் கொடுத்தால்

பெண் செளக்கியமாக வாழ்வாள். அவசரப்பட்டு எங்காவது. பாழுங் கிணற்றில் தள்ளுகிற மாதிரி தள்ளி விடாதீர்கள். அலமு!' என்று ஸ்வர்ணம் தன் நாத்தனரிடம் அடிக்கடி

சொல்லிக்கொண் டிருந்தாள்.

அன்று நடு மத்தியான்னத்தில் மாடியில் நாற்காலியில் சாய்ந்து யோசனையில் ஆழ்ந்திருந்தான்் ரகுபதி. இன்று இல்லாவிடில் நாளை வருவாள். அல்லது கடிதமாவது எழுதுவாள் என்று தினம் தினம் எதிர்பார்த்து ஏமாந்துபோகவே, ரகுபதியின் மனத்தில் ஒருவித அசட்டு எண்ணம்-சபல புத்தி தலை எடுக்க. ஆரம்பித்தது. சர்க்கரையைவிட்டு இனிப்பை எப்படிப் பிரிக்க: முடியாதோ, அம்மா கிரி தாம்பத்திய அன்பினால் இருவரின் உள்ளங்களும் பிரிக்க முடியாதபடி ஒன்றிய நேசம், சாவித்திரிக் கும், ரகுபதிக்கும் ஏற்படவில்லை. மிக மிகக் குறுகிய காலத்துக் குள் அவனுடைய வாழ்க்கை கசந்து வழிந்தது. இளம் மனைவி யுடன் ஆனந்தமாக வாழ்க்கை நடத்தப்போகிருேம்' என்று: அவன் கட்டிய கோட்டை தகர்ந்து விழுந்தது. அதனல், மனம்