தங்கத்துடன் ரகுபதி 99
ஒடிந்துபோயிருந்த அவன் மனக்கண் முன்பு தங்கம் தோன்றி மறைந்துகொண் டிருந்தாள். அவளிடம் அவனுக்கு அலாதியான ஒருவித பாசம் ஏற்படுவதை உணர்ந்தான்். "நாளேக்கு அவள் இங்கிருந்து போய்விடுவாள். நானும் அவளுடன் கிராமத்துக் குப் போய்விடுகிறேன். பிறகு?" என்று யோசித்தான்் ரகுபதி. பிறகு என்ன? அந்தக் கர்வம் பிடித்தவளுக்குப் படிப்பினேயாக ஆடம்பரமில்லாமல், ஒருவருக்கும் சொல்லாமல் தங்கத்தைக் கல்யாணம் செய்துகொண்டுவிடுகிறேன். என்னை யார் என்ன செய்யமுடியும்?' என்று தனக்குத்தான்ே கேட்டுக்கொண்டான்.
கீழே ஸரஸ்வதி பைரவி ராகத்தில் அருளுசலக் கவியின் 'யாரோ இவர் யாரோ' என்கிற கீர்த்தனத்தில் சரணத்தைப் பாடிக்கொண் டிருப்பது கேட்டது. "அந்த நாளில் |செர்ந்தம்
போல உருகிளுர் - சாதாரணமாக இந்த இடத்தை, ஸ்ரஸ்வதி நான்கைந்து தடவைகள் பாடிஞள். ரகுபதிக்கு மிகவும் பிடித்த மான பாட்டுதான்். ஆனால் இன்ருே அவனுக்கு ஸ்ரஸ்வதியின் பேரில் கோபம் வந்தது. சாவித்திரிக்கும். அவனுக்கும்'இந்தி ஜன்மத்தில் மட்டும் இல்லை; அந்த நாளில், கடந்த பிறவி களிலிருந்தே தொடர்பு இருக்கிறது என்பதை ஸரஸ்வதி பாட்டின் மூலம் எச்சரிக்கிருளோ என்று தோன்றியது:
ச்ட் இவள் யார் என் சொந்த விஷயத்தில் தலையிட என்று முனு முணுத்தான்் ரகுபதி, இதற்குள் மாடிப்படிகளில் "தடதட வென்று தங்கம் இரைக்க இரைக்க ஏறி ஓடி வந்தாள்: நிதான்மாக ஸரஸ்வதி அவள் பின்னல் வந்து நின்ருள். தங்கம் ஸரஸ்வதியைத் திரும்பிப் பார்த்து. 'அக்கா! நான் கேட் கட்டுமா?" என்று கேட்டாள்.
- கேளேன். யார் கேட்டால் என்ன?' என்ருள் ஸரஸ்வதி சிரித்துக்கொண்டே.. *
'போ அக்கா! எனக்கு வெட்கமாக இருக்கிறது. நீயே கேட்டுவிடு' என்ருள் தங்கம் லஜ்ஜையுடன்.
"என்ன கேட்பதற்கு இவ்வளவு பீடிகை?' என்று ரகுபதி அவர்களை வினவிவிட்டு, இருவரையும் மாறி மாறிப் பார்த்தான்். 'ஒன்றுமில்லை அத்தான்். தங்கம் பாட்டுக் கச்சேரியே. அதிகம் கேட்டதில்லையாம். டவுனில் இன்று ஏதோ கச்சேரி இருக்கிறதாக நேற்றுச் சொன்குயே: அதற்கு அவளும் வருகிருளாம். இவ்வளவுதான்் விஷயம் என்ருள் ஸரஸ்வதி.