பக்கம்:இருளும் ஒளியும்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேதாந்தி 3

நான்தான்் உங்களுடன் பெண் பார்க்க வரப்போகிற தில்லேயே, அத்தை. நீங்கள் ஏன் கவலைப்பட வேண்டும்?' என்று

கபடமில்லாமல் கேட்டாள்.

ஸ்வர்ணத்தின் கண்களில் நீர் நிறைந்துவிட்டது. துஷ்டத் தனம் செய்யும் குழந்தையைத் தாய் அதட்டியதும், அதன் பிடிவாதம் அதிகமாவதைப்போல் இருந்தன. ஸரஸ்வதியின் பதிலும், செய்கையும்.

உன்னே நான் என்ன சொல்லிவிட்டேன் ஸ்ரஸ்-? லக்ஷன மாக, கன்னிப் பெண் கை நீ என்னுடன் வராமல், அழகாக இருக்கிறது. நான் ரகுவை அழைத்துப்போய் அவர்கள் எதிரில் நிறுத்துவது? நீ வராவிட்டால், பாட்டுப் பரி ைகூடியைத்தான்் யார் நடத்துவது? போ, போ. புறப்படுவதற்கு ஏற்பாடு செய்து கொள். போ' என்று உரிமையுடன் ஸரஸ்வதியை அதட்டி ஞள் ஸ்வர்னம்.

அதென்னவோ வாஸ்தவம். அத்தான்் ஒரு பாட்டுப் பைத்தியம் என்று தெரிந்த ஸரஸ்வதி, பெண் பார்க்கப் போகும் இடங்களிலெல்லாம் ஒரு சிறிய சங்கீதப் பரீட்சையே வைத்து விட்டாள் எனலாம். சில பெண்கள் அறுபது கீர்த்தனங்கள் பாடமென்று சொல்லிவிட்டு, ஸ, ப, வுக்கு வித்தியாசம் தெரியா மல் விழித்தார்கள். சிலரின் சங்கீதம் ஒரே சினிமா மயமாக இருந்தது! கச்சிதமாக நாலு பாட்டுகள் பாடுகிறேன் என்று அது வரையில் பார்த்த பெண்கள் யாரும் முன் வரவில்லை. ஸரஸ்வதி ஒரு தினம் விளையாட்டாக ரகுபதியிடம், 'அத்தான்்! உனக்குத் தான்் வீணை வாசிக்கத் தெரியுமே. சங்கீதமே தெரியாத பெண்ணுகப் பார்த்துக் கல்யாணம் பண்ணிக்கொண்டுவிடேன். பிறகு நீயே பாட்டுக் கற்றுக்கொடுத்துவிடலாம்' என்ருள்.

"ஆமாம். . கல்யாணம் ஆன பிறகு, பிள்ளைகள் மாமனர் வீட்டில் இருந்துகொண்டு, மேற் படிப்புப் படித்துப் பாஸ் செய்கிற ல கடினத்தைப்போலத்தான்் இதுவும் இருக்கும்!'" என்ருள், அத்தை ஸ்வர்ணம் சிரித்துக்கொண்டே .

"அத்தான்ுடைய சுபாவம் அப்படி இல்லை. அத்தை. அவனுக்கு லட்சியம் ஒன்றுதான்் முக்கியம்' என்ருள் ஸரஸ்வதி. படுக்கையில், பாதி திறந்த விழிகளுடன் பழைய நினைவு களில் மனத்தை லயிக்கவிட்டிருந்த ரகுபதிக்குப் பளிச்சென ஞாபகம் வந்தது இந்தச் சம்பாஷணை. அதோடு, யார் லட்சிய வாதி; அவளு, ஸரஸ்வதியா என்ற கேள்வியும் எழுந்தது.