மங்கள ச் சின் கம்பிக்கை 113
வயது நெருங்கிக்கொண் டிருந்தது. அடுத்தாற்போல் சந்துரு வுக்கும் கல்யாணம் பண்ண வேண்டியதுதான்். ஆனல். புக்க கத்தில் வாழவேண்டிய பெண் கோபித்துக்கொண்டு பிறந் தகக் இல் இருக்கிருள் என்பதை நினைக்கையில், சீதாவுக்கு வரன் தேடவோ, சந்துருவுக்குப் பெண் கொள்ளவோ யாருக்கும் தைரியம் ஏற்படவில்லை.
படுக்கையில் கவலேயே உருவமாகப் படுத்திருக்கும் தாயிடம் சந்துரு வந்து உட்கார்ந்தான்். அன்புடன் அவள் நெற்றியில் கை வைத்துப் பார்த்துவிட்டு, "அம்ம்ா! உனக்கு வியாதியே ஒன்று மில்லேயாம். மன நிம்மதி இல்லாமல் உடம்பு கெட்டுப் போயிருப்பதாக டாக்டர் சொல்லுகிருர். உற்சாகமான மனம், அதற்கேற்ற சூழ்நிலை அமையவேண்டும் என்று அவர் கருதுகிரு.ர். நீயோ கொஞ்சமாவது மனசுக்கு ஆறுதலைத் தேடிக்கொள்ள மாட்டேன் என்கிருய். சதா கவலையும் கண்ணிருமாக இருந்தால் உன் உடம்பு எப்படியம்மா சரியாகும்?' என்று ஆசையுடன் விசாரித்தான்் தாயை.
கவலைப்படாமல் எப்படியப்பா இருக்கமுடியும்; மானத் தோடு கெளரவமாக வாழ்ந்த குடும்பம் ஆயிற்றே, நம் குடும்பம்? ஏதாவது பேச்சை ஆரம்பித்தால் உன் அப்பா சீறி விழுகிரு.ர். பெண்ணை நர்ஸ்"கள் பள்ளியில் சேர்க்கப்போகிரு.ராம்! படித்து விட்டு உத்தியோகம் செய்து சாப்பிடுகிருள்! அவள் ஒருத்த ரிடமும் கைகட்டி நிற்க வேண்டாம்' என்கிருரே. இந்த நாளில் இது ஒரு வழக்கம் ஆரம்பித்து இருக்கிறதே!' என்று கூறிவிட்டு, வியாதியால் மெலிந்து வெளுத்துப்போன உதடுகளை நெளித்து வரண்ட சிரிப்பொன்றை உதிர்த்தாள், மங்களம்:
சந்துரு அலட்சியத்துடன் "ஹாம்" என்றுவிட்டு, 'இவளுக்கு இருக்கிற பொறுமைக்கு நர்ஸ்’ உத்தியோகம் ஒன்றுதான்் குறைச்சலாக இருக்கிறது. பொறுமையிலே சாக்ஷாத் பூமிதேவி தான்் நம் சாவித்திரி' என்ருன்.
'மாப்பிள்ளையாகட்டும், அவன் அம்மாவாகட்டும் பரம சாதுக்கள். இவள்தான்் புருஷனுக்கும் மாமியாருக்கும் சற்றுப் பணிந்து நடந்தால் என்ன? பணிவதால் என்ன முழுகியா விடும்?' என்ருள் மங்களம்.
பணிவைப்பற்றியும், அடக்கத்தைப் பற்றியும் ஓயாமல் பேசி அவ்விதமே பல வருஷங்கள் நடந்துகொண்ட மங்களத் .தினலேயே மகளின் மனத்தைப் பணியவைக்க முடியவில்லை
இ. ஒ. 8