பக்கம்:இருளும் ஒளியும்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 இருளும் ஒளியும்

போவதற்கென்று அவளுடைய தகப்பஞர் வந்திருந்தார். பெரிய உத்தியோகத்தில் இருப்பவர். அந்தஸ்து வாய்ந்தவர் என்பதற்கு அறிகுறியாக அவருடன் நாலந்து பேர்கள் வந் திருந்தார்கள். வண்டியிலிருந்து இறங்கியதும் ஸரஸ்வதி அன்புடன் 'அப்பா' என்று அழைத்து அவர் அருகில் சென்று நின்ருள். 'எப்படியம்மா இருக்கி நீ மட்டுமா தனியாக வந்தாய்?' என்று ஆதுரத்துடன் மகளைக் கேட்டு, ஆசையுடன் அவள் முதுகில் தட்டிக் கொடுத்தார். அவருடன் வந்திருந்த நண்பர்களில் ஒருவரைத் தவிர மற்றவர்கள் விடைபெற்றுக் கொண்டு போய்விட்டார்கள். தகப்பளுரும், அவர் நண்பரும் பின்தொடர ஸரஸ்வதி வெளியே சென்று. தயாராக இருந்த வாடகை மோட்டாரில் ஏறிக் கொண்டாள்.

'அப்பாதான்் எவ்வளவு மாறிவிட்டார்! மூன்று வருடிைங் களுக்கு முன்புகூட இளவயதினர்போல இருந்தாரே! இப் பொழுது தலையில் லேசாக வழுக்கை விழுந்துவிட்டதே! என்று மனத்துக்குள் நினைத்துக்கொண்டாள் பரஸ்வதி.

' குழந்தை நன்ருக வளர்ந்துவிட்டாள். சமீபத்தில் பத்திரிகைகளில் வெளியாகி இருந்த ஸரஸ்வதியின் புகைப் படத்தைப் பார்த்தே பரவசமாகி இருந்தேனே. நேரிலே பாத்தால் புகைப்படம் மோசம் என்றுதான்் சொல்ல வேண்டும். முக்கும். விழியும், அடக்கமும், மரியாதையுமாக என் ஸரஸ்வதி எப்படி இருக்கிருள்! "அவள் இல்லையே இந்த ரத்தினத்தைக் கண்டு மகிழ்வதற்கு!" என்று தகப்பனர் மகளைப் பார்த்துச் சந்தோஷமும், மனைவி இதைக்கண்டு அதுபவிப்பதற்கு இல்லையே என்று துக்கமும் எய்தினர். கண்களில் உணர்ச்சிப் பெருக்கால் துளிர்த்த நீரை அடக்குவதற்கு வெகு பிரயாசைப்பட்டார்.

அருகில் உட்கார்ந்திருந்த நண்பர் ஏறக்குறைய ஸரஸ்வதி யின் தகப்பனர் வயதை உடையவர். அவர் பழகுகிற முறையி லிருந்து ஆப்த நண்பர் என்பது சொல்லாமலேயே விளங்கிவிட் டது. நட்பிலே பல தரங்கள் உண்டல்லவா? சிலர் தங்களுடைய வேலைகள் நடக்க வேண்டுமானுல் மிகவும் நட்புரிமை பாராட்டு வார்கள். 'உங்களைப்போல உண்டா?' என்பார்கள். அவர்கள் வேலை முடிந்து விட்டால் பிறகு, "இருக்கிருயா?' என்று கேட்ப தற்குக்கூட அவர்களுக்கு வாய்வலித்துப்போகும்! சில நண்பர் கள் குழைந்து குழைந்து நண்பர்களிடம் வேலே வாங்கிக் கொள் வார்கள். தாங்கள் ஏதாவது செய்ய வேண்டுமானல் துார விலகி