உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இருளும் ஒளியும்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மைசூரில் 127

விடுவார்கள். 'ரெயில் சிநேகம்' என்று குறிப்பிடுகிருேம். ரெயிலில் சில மணி நேரங்கள் சந்தித்துப் பிரிகிறவர்களை அப்படிச் சொல்லுகிருேம். அருகிலேயே இருப்பார்கள் சில நண்பர்கள். அவர்களுடன் நாம் எவ்வளவு நட்புக்கொண்டு பழகிஞலும் அவர்கள் விலகியே செல்வார்கள்.

பாரதத்திலே கர்ணனும், துரியோதனனும் பழகி வளர்த்த நட்பு மிகவும் சிறந்தது. உண்மையான நட்பு எந்த விதமான கட்டுதிட்டங்களுக்கும் உட்பட்டதல்ல. பணக்காரன், ஏழை என்று வித்தியாசம் பாராட்ட அதில் இடம் இல்லை. இந்தக் காலத்திலே சிலர் தாங்கள் சிநேகம் பாராட்டுகிறவர்களின் சொத்து, அந்தஸ்து முதலியவைகளே ஆராய்ந்து பழகுகின்றனர். கண்ணனுக்கும், ஏழைக் குசேலருக்கும் அந்தஸ்தில் மலைக்கும், மடுவுக்கும் உள்ள வித்தியாசந்தான்். இருந்தபோதிலும், அந்த துாய நட்பைப்பற்றிப் படிக்கும் போதெல்லாம் மனம் உருகிக் கண்ணிர் பெருகிவிடுகிறது. இந்த மாதிரியே ஸரஸ்வதியின் தகப்பஞரும், அவருடன் கூடவந்த நண்பர் கோபால தாலரும் அந்தஸ்தில் மிகுந்த வித்தியாசம் உடையவர்கள். பால்யத்தில் இருவரும் விஞ்ஞானக் கல்வி பயில ஒன்ருக மைசூர் ராஜ்யத்தில் வசித்தவர்கள். ஸரஸ்வதியின் தகப்பனர் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர். பாஷை தெரியா தகன்னட ராஜ்யத்தில் கோபால தாஸர் அவருக்குச் சிறந்த நண்பராக விளங்கினர். கல்விப் பயிற்சிக்கு அப்புறம் ஸரஸ்வதியின் தகப்பனருக்கு அதிருஷ்ட வசமாக உயர் பதவி கிட்டியது. கோபால தாஸருக்கும் கிட்டி இருக்கும். ஆனால், தேச சேவைக்காக காந்தி அண்ணலின் அன்புக்குரல் அவரை அழைத்தது. தியாக அக்னியில் ஸ்புடம் போட்ட தங்கத்தைப்போல் இருந்தார் அவர், ஆகவே, பதவியும், உயர்வாழ்வும் அவருக்குக் கிட்டவில்லை. அவரும் அதில் ஆசை கொள்ளாமல் தேசப்பணியிலேயே தம் வாழ்நாளைக் கழித்து விட்டார். இடை இடையே, நண்பர்கள் சந்திக்கும் போதெல் லாம், ஸரஸ்வதியின் தகப்பனர் தம் நண்பரிடம் அவரைப் பல

உத்தியோகங்களை வகிக்கும்படி அழைத்தார். பிரும் மசாரி யாகிய அவருக்கு, தாம் சம்பாதித்து யாரைக் காப்பாற்ற, வேண்டும் என்கிற எண்ணம் மேலோங்கவே நண்பரின்

வேண்டுகோளை மறுத்துவிட்டார்.

அமைதி நிரம்பிய காவிரி நதிக்கரை ஓரமாகவே மோட்டார் சென்று கோபால தாஸ்ரின் சிறு வீட்டை அடைந்தது. வீட்டிற்.