பக்கம்:இருளும் ஒளியும்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2S)

வரவேற்பு

முற்றத்தில் துளசி மாடத்தின் முன்பு மணிக்கோலமிடும் தங்கத்தின் எதிரில் ரகுபதி அதிகாலையில் வந்து நின்ருன். தலைப் பின்னல் முன் பக்கம் சரிந்து விழ, முதுகில் புரளும் மேலாக்கு நழுவ அவள் கோலமிட்டுக்கொண் டிருந்தாள். கைகள் சரசர' வென்று புள்ளிகளை வைத்தன, புள்ளிகளைச் சேர்த்து அழகிய கோலமாக்கின. கோலத்தை முடித்துவிட்டுத் தலை நிமிர்ந்த போதுதான்் அவள் சற்றும் எதிர்பாராத விதமாக ரகுபதி காட்சி அளித்தான்் அங்கே! தங்கம் தன் அழகிய கண்களால் அவனைப் பார்த்துக் கொட்டக் கொட்ட விழித்தாள். பிறகு வழக்கமான

சிரிப்புடன், "ஓ! அத்தாளு! வாருங்கள், வாருங்கள், எங்கே இப்படி? ஒஹோ! தீபாவளிப் பிரயாணமோ?" என்று கேட்டாள்.

"அத்தான்ேதான்்! சாட்சாத் ரகுபதிதான்். நீ ஊருக்கு வரும்போது யாரிடம் சொல்லிக் கொள்ளாமல் வந்தாயோ, அவனேதான்்! தீபாவளி கொண்டாடத்தான்் இங்கே வந்திருக் கிறேன்!' என்று சொல்லிவிட்டு, கூடையைப் பிரித்துக் கட்டுக் கதம்பத்தையும், பழங்களையும் எடுத்து அவளிடம் கொடுத்தான்்.

இதற்குள்ளாக உள்ளிருந்து வியப்புடன் அலமு. அத்தை பரபரவென்று முற்றத்துக்கு வந்தாள். 'வந்தாயாடா, ரகு! வா அப்பா. இப்பொழுதாவது வழி தெரிந்ததே உனக்கு!' என்று அவனை வரவேற்று உபசரித்தாள். தீபாவளி இன்னும் இரண்டு நாட்கள்தாம் இருக்கின்றன என்பதற்கு அறிகுறியாக அவ்வீட்டிலிருந்து 'கம கம' வென்று பலகாரங்களின் வாசனை வீசியது. துளசி மாடத்துக்குக் கோலமிட்டு முடித்தவுடன் தங்கம் கொல்லப்புறம் சென்ருள். தவிடும், பிண்ணுக்கும் கலந்து பிசைந்து ஆசையுடன் கறவைப்பசுவுக்கு வைத்தாள். "தக தக வென்று தேய்த்து அலம்பிய பித்தளைச் செம்பில் நுரை பொங்கும் பாலைக் கறக்க ஆரம்பித்தாள். "சொர், சொர் ரென்று பால் பாத்திரத்தில் விழ ஆரம்பித்தது. ரகுபதி, கையில் பல் துலக்கும் பிரஷ் ஷாடன் கொல்லேப்பக்கம்