3 Ο
சாவித்திரியின் உள்ளம்
தீபாவளி பட்சணத்திற்காக மாவு அரைப்பதற்குத் தகர டப்பாக்களில் சாமான்களே நிரப்பிக்கொண்டு உட்கார்ந்திருந் தாள் மங்களம். தலே தீபாவளிக்கு மாப்பிள்ளை வரும் வீட்டில் நிலவ வேண்டிய உற்சாகம் அங்கே காணுேம். தீபாவளி அழைப்பு அனுப்பியதைப்பற்றிச் சந்துருவும், சீதாவும், மங்களமும் மட்டும் அறிந்திருந்தனர். முன் ஜாக்கிரதையாக விருந்துக்கு வேண்டிய சாமான்களை வாங்கி வைத்துவிட்டாள் மங்களம்.
'வருஷா வருஷம் வருகிற பண்டிகைதான்ே? மாப்பிள்ளை வந்து சவரணேயாகத் தலை தீபாவளி கொண்டாடுகிறது பாழாகத் தான்் போகிறது! எதற்கு இப்படி ஒரேயடியாகச் சாமான்களை வாங்கி நிரப்பி வைத்திருக்கிருயாம்?" என்று பாட்டி மங்களத்தைக் கேட்டாள். பாட்டியின் வார்த்தைகள் மங்களத்துக்குச் சுரீரென்று தைத்தன. எதையாவது அச்சான்ய மாகச் சொல்லிக்கொண்டு இருப்பதுதான்் இந்தக் கிழத்துக்கு வேலே. வீட்டைச் சுற்றிச் சுற்றிவந்து, அது எதற்கு இது என்ன?’ என்று ஓயாமல் கேட்டுத்தான்் என்ன பலனை அடையப் போகிருளோ?' என்று மனத்துக்குள் மாமியாரை வெறுத்துக் கொண்டாள்.
தீபாவளி நெருங்கிவிட்டது என்பதற்கு அறிகுறியாக அவ. வப்போது வெடிகளின் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. புடைவைக் கடைகளில் கூட்டம் நெரிந்தது. அசல் நெய்யுடன் மட்ட நெய்யைக் கலந்து புத்துருக்கு நெய் என்று வியாபாரிகள் பீற்றிக் கொண்டனர். பட்டாசுக் கடைகளில் சிறுவர் சிறுமியரின் கட்டம். குடும்பத் தலைவருக்கு ஒரே தலைவலி, எப்படி "பட்ஜெட் டைச் சமாளிக்கப் போகிருேம் என்று.
குதுாகலம் நிரம்பியிருக்கும் இந்த நிகழ்ச்சிகளைப் பார்த்துச் சாவித்திரி பெருமூச்செறிந்தாள். செளம்யமான மனத்தைப் படைத்தவர். பூரீராமர். குற்றமுள்ளவரிடத்தும் நன்மையைச் செய்கிறவர். நன்றியுள்ளவர். சத்தியம் தவருதவர்' என்றெல் லாம் வால்மீகி ராமாயணத்தில் வரும் வர்ணனையைச் சீதா