சாவிச் கிரியின் உள்ளம் 135.
உரக்கப் படித்துக்கொண் டிருப்பதைச் சாவித்திரி கேட்டாள். கவியின் அமர சிருஷ்டியாகிய பூரீ ராமசந்திரனின் கல்யாண குணங்களைக் கேட்டவுடன் சாவித்திரியின் உள்ளம் பாகாய் உருகியது. சிறு விஷயத்துக்காக ஏற்பட்ட இவ்வளவு மன ஸ்தாபத்தையும், அதைத் தீர்ப்பதற்குத் தெரியாமல் தான்் படும் அவஸ்தையையும் நினைத்து அவள் மனம் வருந்தியது. ரகுபதி உயர்ந்த குணங்களைப் படைத்தவன். ஏதோ சில விஷயங்களில் தவிர, பிறர் மனத்தை நோக வைக்கும் குணம் அவனிடமில்லை. தான்் செய்த குற்றத்தை உணர்ந்து அவளிடம் நேராகத் தைரியமாக மன்னிப்புக் கேட்டிருக்கிருன். அசட்டுக் கெளரவம் என்பது அவனிடம் லவலேசமும் இல்லை. இத்தகைய குணவான க் கணவகை அடைந்தும் அவனிடம் ஒத்து வாழ முடியாமல் போனது எதனுல் என்று சாவித்திரி சாவதான்மாக இப்பொழுதுதான்் ஆராய ஆரம்பித்திருந்தாள். தீபாவளிக்குக் கணவன் வரவேண்டும். பரம சாதுவாகிய தன் மாமியார், பிள்ளையை அனுப்பி வைப்பார் என்றும் நினைத்துக் கொண்டாள், சாவித்திரி.
முற்றத்தில் காகம் உட்கார்த்து கத்தும் போதெல்லாம். , ஹோ! அவர் வருகிருர்போல் இருக்கிறது!" என்று நினைத்து உவகை எய்துவாள்.
அன்று ராஜமையர் காரியாலயத்திலிருந்து திரும்பி வரும் போது கையில் பெரிய துணி மூட்டையுடன் வந்து சேர்ந்தார். காப்பி அருந்தி சற்று இளைப்பாறிய பின்பு மூட்டையைப் பிரித்து, 'இது சாவித்திரிக்கு, இது சீதாவுக்கு, இது சந்துரு வுக்கு, இது உனக்கு' என்று துணிகளை ஒவ்வொன்ருக எடுத்து மேஜை மீது வைத்தார்.
எலோருக்கும் போக ஒரு ஜதை சரிகை வேஷ்டி மிகுந் திருந்தது. சீதா குறும்புத்தனமாக அதைப் பார்த்துக் கொண்டே, 'அப்பா! மாப்பிள்ளையை மறக்கவில்லைபோல் இருக்கிறதே! ஜம்மென்று சரிகை போட்டுப் பிரமாதமாக வாங்கியிருக்கிறீர்களே!' என்று கூறிச் சிரித்தாள். மாப்பிள்ளை வருவான் என்று ராஜமையரும் எதிர்பார்த்துத்தான்் ஜவுளி எடுத்திருந்தார்.
"அடியே! இரண்டு பவுனில் கைக் கடியாரத்துக்குச் சங்கிலி பண்ணச் சொல்லி இருக்கிறேன். கையோடு இருக்கட்டுமே ஒன்று' என மங்களத்தைப் பார்த்துக் கூறிஞர் அவர்.