பக்கம்:இருளும் ஒளியும்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 இருளும் ஒளி யும்

'அழைக்காத விட்டுக்குச் சம்பந்தியாக வரமாட்டானுே, உங்கள் மாப்பிள்ளே! ரொம்பத் தெரிந்தவர். நீங்கள்! உங்கள் தலை தீபாவளிக்கு என் அப்பா எப்படியெல்லாம் உபசாரம் பண்ணி இருந்தார் என்பதை நினைத்துப் பாருங்கள். ஒரு மாசத்துக்கு முன்பே கடிதங்களில் உங்களை வரச்சொல்லி எழுதி இருந்தாரே' என்று சமயத்தை விடாமல் மங்களம் இடித்துக் காட்டினுள்.

'ரகுபதியோடு ஸரஸ்வதி யும் வருவாள் அம்மா. அவளுக்கு நாம் ஏதாவது திபாவளிப் பரிசு கொடுக்க வேண்டாமா?' என்று சந்துரு கேட்டான்.

ஒரு நிமிஷங்கூட ஸரஸ்வதியை நீ மறக்கமாட்டாய் போலிருக்கிறதே! உன் வியாச புஸ்தகம் பூராவும் ஸரஸ்வதி நாம ஸ்மரணையாக இருக்கிறதே! இந்த ஸ்துதியைக் கேட்டு சாக்ஷாத் பூர் ஸரஸ்வதியே பிரசன்னமாகி விடுவாள்; இல்லையா அண்ணு?' என்று சீதா தமையனைச் சமயம் பார்த்துத் தாக் கிள்ை.

வெட்கத்தால் பதில் ஒன்றும் கூரு மல் சந்துரு மென்று விழுங்கினன். அந்த வீட்டில் ஒவ்வொருவரும் ரகுபதி வர வேண்டும் என்று ஆவலுடன் எதிர்பார்த்தார்கள். சந்துரு யாருக்கும் தெரியாமல் நடராஜரின் சித்திரம் ஒன்றை வாங்கி வைத்திருந்தான்். சாதாரணப் புடைவையும், ரவிக்கையும் உன்னத லட்சியங்களுக்கு இருப்பிடமான ஸரஸ்வதிக்கு அளிப் பதற்குத் தகுதி உள்ளவைகளாக இல்லை. ஸரஸ்வதியைத் தீபாவளியின்போது சந்தித்தால் இந்தக் கலேப் பரிசை அவளுக்குக் கொடுக்க வேண்டும்; அவன் துாய காதல் ஈடேற தில்லையம்பலத்து இறைவன் அருள் புரிவான் என்றும் நம்பிஞன்.