138 இருளும் ஒளியும்
இருந்து விடுவேன் என்று கவலைப்படுகிறிர்களா? அப்படி யெல்லாம் நான் விரதம் ஒன்றும் எடுத்துக்கொள்ளவில்லை. லட்சியப் பாதையில் செல்லுகிறவர்கள் வகுத்துக் கொள்ள வேண்டிய இல்லறமே வேறு. அத்தான்் ரகுபதி ஒரு லட்சிய வாதி. இசை என்றால் ஆசைப்படுகிறவன். அவன் ஆரம்பித்த இ வாழ்வு இனிமையாக இல்லை. அவன் லட்சியம் ஈடேற அவன் மனைவி அவனுடன் ஒத்துழைக்க மறுக்கிருள். அவளுவது தன் மனதை மாற்றிக்கொள்ள வேண்டும் அல்லது அவளாவது அவன் வழிக்குத் திரும்ப வேண்டும். ஆகையால், நான் விவாகம் செய்துகொள்வதற்கு முன்பு யோசித்துத்தான்் செய்து கொள்ள வேண்டும். அன்று கூறியதுபோல் நான் ஆண்டாளாக மாறி விடுவேன் என்று வருத்தப்படாதீர்கள். அவ்வளவு பக்தியும். மனத் தெளிவும் சாதாரணப் பெண்ணுகிய எனக்கு இல்லை' என்ருள் அவள்.
சிறிது நேரத்துக்கெல்லாம் </ПГ ќтат வெளியில் ஊர்ந்து செலலும் விமானத்தைப் பார்த்துக்கொண்டே நின்ருள் ஸ்ரஸ்வதி. அப்பா வந்தார். அவருடன் ஒரு வார காலம் பொழுது சென்றதே தெரியாமல் பல இடங்களைச் சுற்றிப் பார்த்தோம். அத்தான்ும், சாவித்திரியும் தீபாவளி முடிந்து ஊருக்குத் திரும்பி விடுவார்கள். அத்தையும் நாட்டுப் பெண்ணைப்பற்றிய களிப்பில் என்னை மறந்துபோய்விடுவாள்' என்று சிந்தனை படர்ந்து சென்றது. இவ்வளவு பெரிய உலகில் தான்் தனியாக நிற்பதாக ஒருவித பிரமை அவளுக்கு ஏற் பட்டது.
' குழந்தை! வீட்டிற்குப் போகலாமா?' என்று கோபால தாஸர் அவளை அழைத்தபோதுதான்் அவள் சுய உணர்வை அடைந்தாள். இருவரும் நதிக்கரை ஓரமாகவே நடந்தார்கள். அடிக்கடி ஸரஸ்வதி பெருமூச்சுவிடுவதையும், கண்களைத் துடைத்துக் கொள்வதையும் கவனித்த நண்பர், 'ஏனம்மா! வருத்தப்படுகிருயா என்ன? அன்று எனக்குப் பலமாக உபதேசித்த நீயா இப்படிக் கண்ணிர் விடுவது? வீட்டிற்குப் போய் நான் எழுதிய குழலோசை' என்கிற கவிதையைப் படித்துச் சொல் கிறேன். கேட்டு ஆறுதல் அடையலாம். வா அம்மா!' என்று அன்புடன் கோபால தாஸ்ர் அழைத்தார் ஸரஸ்வதியை.
வீட்டை அடைந்ததும் அன்று காலைத் தபாலில் கடிதம் ஒன்று வந்திருந்தது. ரகுபதி கிராமத்திலிருந்து எழுதிய