பக்கம்:இருளும் ஒளியும்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாமியார் காட்டுப் பெண்

தெரிந்து எந்த மரியாதையையும் செய்தால் நன்ரு கச் சோபிக்கும்' என்ருன் சந்துரு:

அந்த வீட்டில் தனக்குத் தெரியாமல் ஒன்றும் நடக்கக் கூடாது என்கிற கட்சியைச் சேர்ந்தவள் சாவித்திரியின் பாட்டி. ஆகவே, "ரொம்ப நன்ருக இருக்கிறதே! கல்யா - ம் பண்ணுகிற

குழந்தைக்குக் கை நிறைய வளையல்கள் வேண்டாமாடா, அப்பா?' என்று கேட்டாள் டாட்டி.

இவ்வளவு வாதப் பிரதிவாதங்களுக்கும் ராஜமையர்

தலையைக் கூட அசைக்காமல் சாய்வு நாற்காலியில் சாய்ந்து கம்பீரமாகப் புன் ன கை செய்துகொண்டு படுத்திருந்தார். குடும்பத் தலைவர் என்கிற அந்தஸ்து எவ்வளவு பொறுப்பு வாய்ந்தது என்பதை நினைத்தே அவர் யோசனையில் ஆழ்ந்திருத் தார் என்று கூறலாம். வீட்டிலே கல்யாணச் சீர் வரிசைகளைப் பற்றி ஒவ்வொருத்தர் அபிப்பிராயம், ஒவ்வொரு விதம் இருக் கிறது. பண்ச் செலவை எப்படியோ சரிக்கட்டி சமாளிக்கும் திறன் அவரிடந்தான்ே இருக்கிறது? அதைப்பற்றி யாராவது நினைத்துப் பார்க்கிருர்களா?- இவ்வாறு எண்ணித்தான்் அவர் புன்னகை புரிந்திருக்க வேண்டும்.

ராஜமையர் காபி சாப்பிட்ட டவராவையும் டம்ளரையும் எடுத்துக்கொண்டு மங்களம், ஒன்றுக்கும் உங்கப்பா வாயைத் திறக்கமாட்டார். வீடு பற்றி எரிந்தால் கூட, "அதென்ன புகைச்சல்?’ என்று கேட்கிறவராயிற்றே!' என்று கூறிக் கொண்டே, விசுக்கென்று சமையற்கட்டிற்கு எழுந்து சென்று விட்டாள்.

அதற்கும் ஒரு சிரிப்புச் சிரித்துவிட்டு ராஜமையர், "சீதா! அவர்கள் எல்லோரும் வருவதற்கு மூன்று மணி ஆகும். அதற்குள் சாவித்திரியின் அலங்காரமெல்லாம் முடிந்துவிடும் அல்லவா?' என்று மகளைக் கூப்பிட்டு விசாரித்தார்.

சீதா ஏதோ வேலையாக அந்தப் பக்கம் வந்தவள். தகப்பஞர் கேட்ட கேள்விக்குப் பதில் கூருமல் இரு கரங்களிலும் நான்கு பட்டுப் புடைவைகளை வாரி எடுத்துக்கொண்டு அவர் கேட்ட தற்குத் தலையை மட்டும் அசைத்துவிட்டு அந்த வீட்டுக் காமரா அறைக்குள் சென்று கதவைத் தாழிட்டுக்கொண்டாள். அந்த அறைக்குள் சாவித்திரி, பீரோவிலிருக்கும் ஒவ்வொரு புடைவை யாக எடுத்து மத்தியான்னம் பிள்ளை வீட்டார் வரும்போது எதை உடுத்துக்கொண்டால் அழகாக இருக்கும் என்று ஆராய்வதில்