உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இருளும் ஒளியும்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 இருளும் ஒளியும்

சந்துரு தாயின் கரங்களில் முகத்தைப் புதைத்துக் கொண்டு, 'அம்மா! நீ என்ன செய்யச் சொல்கிருயோ அப்படிச் செய்கிறேன் அம்மா. ரகுபதியை நேரில் போய்ப் பார்த்துப் பேசுகிறேன். அதற்காக அப்பா என்னேக் கோபித்துக்கொண் டாலும் பரவாயில்லே. ரகுபதியே என்னே மரியாதைக் குறைவாக நடத்திலுைம் பொறுத்துக் கொள்கிறேன். ஒரு நன்மை விளை வதற்காக ஆயிரம் பிழைகளைப் பொறுக்கலாம், அம்மா. உன் மனம் குளிர்வதற்காக நான் அவமான ம் அடைந்தாலும் பாதக மில்லே. எனக்கு விவரம் தெரிந்த நாட்களாகப் பரம சாது வாகக் குடும்பத்துக்கே உழைத்து, அதில் காணும் நலன்களைக் கண்டு பெருமைப்படும் உனக்காக நான் இந்தச் சிறு காரியத் தைச் செய்யக்கூடாதா என்ன?' என்ருன் உணர்ச்சியுடன்.

, காலேஜிலிருந்து திரும்பி வந்த சீதா தமையன் கடைசியாகக் கூறிய வார்த்ன்தகளேக் கேட்டாள். பிறகு அவனைப் பார்த்து, 'அண்ணு! அத்திம்பேர் ஊரில் இல்லையாம். அவருடைய கிராமத்தில் இருக்கிருராம். ஸரஸ்வதி மைசூருக்குப் போய் இருக்கிருளாம். ஊரிலே ஸ்வர்ணம் மாமி மட்டும் இருப்பதாக என் சிநேகிதி ஒருத்தி சொன்னுள்' என்று தெரிவித்தாள்.

மங்களம் ஆவலுடன் சந்துருவின் முகத்தைப் பார்த்தாள். பிறகு அவனைப் பார்த்து. 'ஸரஸ்வதியின் விலாசம் தெரிந் தாலாவது நீ அவளுக்காவது ஒரு கடிதம் போடலாம். இந்தக் காலத்தில் இதிலெல்லாம் தவறு ஒன்றுமில்லையே. விலாசமும் தெரியவில்லையே. என்ன செய்கிறது. இப்போது?' என்று கவலேயுடன் கேட்டாள்.

'இனிமேல் நேரில்தான்் எல்லா விஷயங்களையும் திர்க்க வேண்டும் அம்மா. ஸரஸ்வதி இதில் தலையிட்டிருந்தால் இந்த விஷயம் இவ்வளவு முற்றி இருக்காது. அவள் விலகிச் சென் றிருப்பதைக் கவனித்தால் இதில் தலையிட அவளுக்கும் விருப்ப மில்லையோ என்று தோன்றுகிறது. ஆனால், தன் அத்தான்ின் குடும்பம் ஒழுங்குபடுவதை அவள் விரும்பாமல் இருக்க மாட்டாள். நானே கிராமத்துக்குப் போய் ரகுபதியைப் பார்த்து வருகிறேன்' என்று கூறிஞன் சந்துரு.

'அப்படித்தான்் செய்! ஒருவேளை நீ கிராமத்திலிருந்து. திரும்புவதற்கு முன்பே மைசூரிலிருந்து ஸரஸ்வதி வந்து விட்டாளால்ை அவளேயும் இங்கு அழைத்து வா. அந்தப் பெண்ணின் முகம் என் மனசைவிட்டு அகனவே மாட்டேன்