உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இருளும் ஒளியும்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34.

பிரார்த்தனே

பொழுது விடிந்தால் லரஸ்வதி ஊருக்குப் புறப்பட வேண்டும். மைசூர் ராஜ்யத்தில் பல இடங்களில் அவள் கச்சேரிகள் நடைபெற்றன. கோபாலதாஸர் அக்கறையுடன் அவளேக் கவனித்துக் கொண்டார். அதிகமாகப் புகழும், பொருளும் சம்பாதிக்க வேண்டும் என்கிற ஆசையைவிட, கலை மூலமாக - நாதோபாஸ்னயின் மூ ல மா. க - உள்ளத்தைத் து.ாய்மைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்கிற ஆசைதான்் ஸ்ர்ஸ்வதியிடம் மேலோங்கி இருந்தது. அன்று வெள்ளிக்கிழமை ஆதலால் காலேயிலேயே ஸ், ஸ்வதி கோபாலதாலருடன் சாமுண்டிமலைக்குப் புறப்பட்டாள். பனி போர்த்த மைசூர் நகரம் இன்னும் விழித்துக்கொள்ளவில்லை. சிலு சிலு வென்று நடுக்கும் குளிரில், ஸரஸ்வதி காவிரியில் ஸ்நானம் செய்துவிட்டு மலேக்குப் புறப்பட்டுவிட்டாள். மலை அடிவாரத்தை அடைந்த தும் கோபால தாஸர் அவளைக் கனிவுடன் பார்த்து, ' குழந்தை! உன் ல்ை மலை ஏற முடியுமா? இல்லாவிடில் டாக்ஸி' வைத்துக் கொள்ளலாமா?' என்று கேட்டார்.

‘'வேண்டாம் மாமா! மெதுவாக நடந்து இயற்கைக் காட்சிகளைப் பார்த்துக்கொண்டே போகலாம். நாம் யந்திர, யுகத்தில் வசிப்பதுதான்் தெரிந்த விஷயமாயிற்றே. தெய்வ சந்நிதான்த்தில் கூடவா நம் அவசரத்தைக் காண்பித்துக் கொள்ள வேண்டும்?' என்று கூறிப் படிகளின் வழியாக ஏற ஆரம்பித்தாள்.

மைசூர் நகரம் அமைதிக்கு இருப்பிடம். அங்கு அமைதி யாகப் பெருகி ஓடும் காவிரியே அதற்குச் சாட்சியாக விளங்கு கிருள். நவராத்திரிகளில் கோலாகலம் நிரம்பியிருக்கும் இந்த அழ கிய நகரத்தில், மற்ற நாட்களில் அமைதியைக் காணலாம். மலை மேல் உயர்ந்து நிற்கும் கோபுரத்தைப் பார்த்ததுமே ஸரஸ்வதி யின் உள்ளம் சிலிர்த்தது. ஜகன்மாதா என்று அழைக்கப்படும் தேவி இங்கு ரெளத்ராம்சத்தில் வீற்றிருக்கிருள். தாயின் அன்பில் கோபத்தையும், கண்டிப்பையும் காணமுடிகிறதே..