三5
I நான் எழைப் Q_ গো
+
திபாவளிப் பண்டிகைக்கு அப்புறம் கிராமம் மறுபடியும் அமைதியில் ஆழ்ந்துவிட்டது. தங்கம் முன்னேப்போல ரகுபதி: யிடம் அதிகம் பேசுவதில்லை. "படித்தவர் என்று சொல்லிக் கொள்கிருரே தவிர, கொஞ்சமாவது நல்லது கெட்டது தெரிய வில்லையே இந்த அத்தான்ுக்கு!’ என்று நினைத்துக்கொண்டாள்
தங்கம். ஏற்கனவே ஊரார் அவளைக் கல்யாணம் ஆகாமல் குதிர் மாதிரி நிற்பதாக வர்ணித்து வந்தார்கள். குதிரை மாதிரி திரிவதாகவும் கதை கட்டியிருந்தார்கள். வாயாடி
என்று வேறு நாமகரணம் குட்டி இருந்தார்கள். கன்ன பின்னு' என்று பல்லேக் காட்டும் கிராமத்து வாலிபர்களுக்குத் தங்கத் தைக் கண்டாலே சிம்ம சொப்பனம்! ஏரிக்கரையில் அவளிடம் அசம்பாவிதமாக நடந்துகொண்ட வாலிபன் ஒருவனுக்குத் தங்கத்தை நினைத்தபோதெல்லாம் முதுகிலே யாரோ சாட்டை யால் சுளிர், சுளிர்' என்று அடிப்பதுபோல் பிரமை ஏற்படுவ துண்டு. துணிகளைத் துவைக்கும் தங்கத்தின் எதிரில் சிரித்துக் கொண்டே நின்றதன் பலனே அதுபவித்திருந்தான்் அவன்.
தங்கம் அவனே ஏறிட்டுக்கூடப் பார்க்கவில்லை. பச்சைத் தண்ணிரில் புடைவையை நனைத்து முறுக்கிப் பிழிந்து கல்லின் மீது பட் பட் டென்று அடித்தாள். வேகமாக சுழற்றிச்
சுழற்றி வீசிள்ை. சுளிர்' என்று ஜலம் வேகமாக வாலிபனின் முகத்தில் தெறித்தன. அவன் முதுகைத் திருப்பிக் கொண்டு நின்றபோது 'சுரீர்” என்று முதுகில் தெறித்தன. அவன் திரும்பிப் பார்த்தபோது தங்கம் புடைவையை முறுக்கிப் பிழிந்து கையை ஓங்கிக்கொண்டு நின்றிருந்தாள். வாலிபனின் எண் சாண் உடம்பும் ஒரு சாளுகக் குறுகியது! அன்றுமுதல் தங்கத்தை அவன் கோவிலில் வணங்கும் பர தேவதையாக நினைத்தான்். அவள் இருக்கும் திசைக்கே ஒரு கும்பிடு போட் டான்! அவள் ரொம்பவும் கண்டிப்புக்காரி என்பதைக் கிராமத்து ஏழை ஜனங்கள் புரிந்துகொண் டிருந்தார்கள். "தங்கம்மா எத்தனை வருசம் கல்யாணம் கட்டிக்காமல் இருந்தாலும் பரவா