உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இருளும் ஒளியும்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3マ

விமோசனம் உண்டா ? .

சத்துரு தன் தாயிடம் கூறியபடி ரகுபதியைப் பார்த்து முடிவாக விஷயங்களே ஒழுங்குபடுத்துவது என்கிற திர்மானத் துக்கு வந்துவிட்டான். ஸ்ர ஸ்வதி இருந்தால் இந்த விஷயத்தில் மிகவும் உதவி செய்வாள் என்றும் நம்பினன். பலவிதமான குழப்பங்களுக்கிடையில் ஸரஸ்வதியின் அழகிய முகமும், கருணை ததும்பும் கண்களும் அவன் மனத்தைப் பூரிக்கச் செய்தன. ஸ்ரஸ், வதியை எதிர்பாராமல் கிராமத்தில் சந்தித்தால் அவன் ஆசை பூர்த்தி ஆகிவிடும். ஆகவே உற்சாகத்துடன் சந்துரு கிராமத் துக்குக் கிளம்பினன். .

இடையில் ஸரஸ்வதி கிராமத்தின் முக்கியமான இடங்கள்ை எல்லாம் சுற்றிப் பார்த்தாள். தங்கமும், அவளும் ஆந்திரீக மாகக் கூடிப் பேசினர். ரகுபதி தன்னிடம் அசட்டுத்தனமாக நடந்துகொண்டதையெல்லாம் தங்கம் ஸரஸ்வதியிடம் விவரித் தாள். கோவிலில் புஷ்பக் குடலையைப் பற்றி அவன் இழுத்ததை யும். தான்் அவனேக் கடிந்து பேசினதையும் கூறிவிட்டுத் தங்கம், "பாவம்' என்று வருந்தினுள்.

இதையெல்லாம் கேட்டபோது ஸ்ரஸ்வதியின் மனம் வெட் கத்தால் குன்றிப்போனது. உயர்ந்த லட்சியவாதியாகிய ரகுபதி குறுகிய காலத்துக்குள் இவ்விதம் மாறிவிட்டான் என்பதை அவளால் நம்பவே முடியவில்லை. தங்கத்தின் மாசற்ற குணத்தை யும், உறுதியையும் கண்டு வியந்தாள்.

'தங்கம்! உன்னை நான் ஊரில் ஒரு தடவை நீ புத்திசாலி என்று தெரிவித்தேனே. அந்த வார்த்தை பொய்க்கவில்லை. நீ ரொம்பவும் புத்திசாலி. மிகுந்த கெட்டிக்காரி. சாவித் திரியைப் பாராமல் உன்னை முதலில் நான் பார்த்திருந்தால் அத்தான்ுக்கு உன்னையே கல்யாணம் செய்து வைத்திருப்பேன். இவ்வளவு சங்கடங்கள் ஏற்பட்டிருக்காது' என்று பாராட்டினுள் ஸ்ரஸ்வதி.

'போ அக்கா! நீதான்் என்னைக் கெட்டிக்காரி என்று கொண்டாடுகிருய் புத்திசாலி என்று புகழ்ந்து பேசுகிருய்.