162 இருளும் ஒளியும்
பெரியவளான நன்முக வாழவேண்டும் என்று விரும்பு கிரு.ர்கள்' என்று கூறிஞள்.
சோர்ந்திருந்த தங்கத்தின் மனத்தில் உற்சாகம் குமிழியிட்டது. 'அக்கா! நீயும், நானும் சேர்ந்து பாடி எவ்வளவு நாட்களாயின? பாடலாமா அக்கா?' ' என்று கேட்டாள்.
'ஆஹா, பாடலாம்' என்று ஸரஸ்வதி ஆமோதித்ததும் அந்த விட்டுக் கூடத்திலிருந்து இன்னிசை பெருகியது.
'பூங்குயில் கூவும் பூஞ்சோலையில் ஒரு நாள்
மாமயில் மீது மாயமாய் வந்தான்். . . . . . பாடிக்கொண்டே தங்கம் சிந்தித்தாள். 'பரம ஏழையாகிய எனக்கு நல்ல கனவளுக ஒருவன் கிடைப்பான் என்று ஸ்ரஸ்அக்கா சொல்கிருள். மாயமாக அந்த ஒருவன்' என்று வருவானே? அவன் எப்படிப்பட்டவளுே? முருகவேள் அதற்குக் கிருபை செய்வான?' என்று பலவாறு நினைத்தாள் அவள்.
நல்லவர்களே வாழ்விக்கும் இறைவன் அருள் புரிந்தான்். தெருவில் வந்து நின்ற வண்டியிலிருந்து சந்துரு இறங்கி உள்ளே வந்தான்். இதுவரையில் அறையில் உட்கார்ந்திருந்த ரகுபதி, தங்கமும், ஸரஸ்வதியும் பாடுவதைக் கேட்டுக் கூடத்தில் வந்து உட்கார்ந்திருந்தான்். சந்துருவின் வரவை யாரும் எதிர்பார்க்க வில்லே. ஒரு நிமிஷம் ரகுபதியின் மனத்தில் கோபம், ரோஷம், வெட்கம். அவமானம் முதலிய உணர்ச்சிகள் தோன்றின. தலையைக் குனிந்து உதட்டைக் கடித்துக்கொண்டே உட்கார்ந். திருந்தான்் அவன்.
வீட்டுக்கு வந்தவர்களே 'வாருங்கள்' என்று வாய்குளிர அழைப்பது நமது சிறந்த குணங்களில் ஒன்று. வரவேற்காத வீட்டு வாசலை மிதிப்பதற்குக் கூட உள்ளம் கூசுகிறது.
சந்துரு தயுங்கினன். பாட்டைப் பாதியில் நிறுத்தி விட்டாள் ஸ்ரஸ்வதி. தன் அழகிய கண்களை உயர்த்தி, "நமஸ் காரம், வாருங்கள். ஊரில் எல்லோரும் செளக்கியந்தான்ே?" என்று விசாரித்தாள்.
தங்கம் எழுந்து இரண்டெட்டில் உக்கிராண அறைக் கதவருகில் போய் நின்று வந்தவர் யாராய் இருக்கும் என்று யோசித்தாள். சுருள் சுருளாக வாரிவிடப்பட்ட கேசமும், ஆழ்ந்து சிந்திக்கும் கண்களும் உயர்ந்த உருவமும் கொண்ட