உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இருளும் ஒளியும்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விமோசனம் உண்டா? 163

அந்தச் சுந்தர புருஷனே, ஆறு முகனேதான்் தனது பிரார்த்தனே யைக் கேட்டு அனுப்பி இருக்கிருளுே என்று எண்ணிப் பூரித்துப் போளுள். திடீரென்று எதிர்பாராதவிதமாக-மாயமாக வந்து நிற்கும் புருஷன் - தன்னை வாழ்விக்கத்தான்் வந்திருக்கிருனே என்று எண்ணிை எண்ணி மாய்ந்துபோனுள் தங்கம்.

சந்துரு ஸரஸ்வதியைக் கனிவுடன் பார்த்து. எல்லோரும் செளக்கியந்தான்். அம்மாவுக்குத்தான்் உடம்பு சரியில்லை. பலஹlனமாக இருக்கிருள்' என்று கூறிவிட்டு, 'மாப்பிள்ளை! தீபாவளிக்கே நீங்கள் வருவீர்கள் என்று எதிர்பார்த்தேன். லரஸ்வதியும் வருவாள் என்று அம்மா நினைத்துக்கொண் டிருந்தாள்' என்ருன்.

நான் வந்திருக்கவேண்டியதுதான்்! அத்தான்ும், நானும் ரெயிலடி வரையில் ஒன்ருகத்தான்் வந்தோம். அவசரமாக என் தகப்பளுரைப் பார்ப்பதற்கு மைசூர் போயிருந்தேன். வராமல் விட்ட பிசகை இப்பொழுதுதான்் உணர்கிறேன்!' என்ருள் ஸ்ரஸ்வதி.

'யார் பேரில் பிசகிருந்தாலும் அதையெல்லாம் மறந்து மன்னித்துவிடுவதுதான்் மனிதப் பண்பு. சாவித்திரி ரொம்பவும் மாறிவட்டாள். அவள் மண் சிலே தன் கணவனை எப்பொழுது சந்திக்கப் போகிருேம் என்கிற ஆவல் மிகுந்திருக்கிறது. தன் செய்கையை நினைத்து வெட்கப்படுகிருள் என்றே தோன்று கிறது. ரகுபதி! பெண்ணின் மனத்தை நம்மால் புரிந்து கொள்ள முடியாது. ஊருக்குக் கிளம்புவதற்கு முன்பு சீதா என்னிடம் ஒரு சிறு நோட்டுப் புஸ்தகத்தைக் கொடுத்தாள். படித்தேன். நீந்தத் தெரியாதவன் தண்ணிரில் விழுந்து தத்தளிப்பதை யாராவது பார்த்துக்கொண்டு சும்மா இருப்பார்களா? அவனைக் காப்பாற்ற எப்படியும் முயலுவார்கள். சாவித்திரி கண்ணிர் விட்டுப் பல இரவுகள் அழுதிருக்கிருள் என்பதை அந்தச் சிறு புஸ்தகம் விளங்க வைத்துவிட்டது.

மாடியிலே நிலவு வீசுகிறது. களைத்து வீடு வந்த கணவருக்கு நான் எந்த வகையில் இன்பமளித்தேன்? கோபத்தால் பொருமினேன், ஏன்?"

'கணவர் தூங்கிவிட்டார். அமைதியாகத் துாங்குகிரு.ர். அவர் அமைதி என் ஆத்திரத்தைத் துாண்டிவிட்டது. பொருமைத் தீயில் மனம் வெந்து போகிறது.'