10 இருளும் ஒளியும்
தம்ப சுப்ரமணியின் பிள்ளை குண்டு! கர்மம், கர்மம்!' என்று தலையில் இரண்டு போட்டுக்கொண்டாள் பாட்டி:
பாட்டிக்கு வயசு எழுபது ஆனாலும் வீட்டில் நடக்கும் ஒவ்வொரு விஷயமும் தனக்குத் தெரியாமல் நடக்கக்கூடாது என்கிற எண்ணம் வாய்ந்தவள். பிள்ளைகளே வளர்த்துப் பெரியவர்கள் ஆக்கியாயிற்று. பெண்களும் புக்ககம் போய் விட்டார்கள். பேரன் பேத்திகள் வீடு நிறைய இருக்கிரு.ர்கள். செய்த வேலைகள் போதும், இனி ஒய்வு பெறலாம்' என்கிற எண்ணம் பாட்டிக்குக் கிடையாது. "நாம் ஒன்றிலும் தலையிடக் கூடாது. கிருஷ்ணு, ராமா என்று காலத்தை ஒட்டவேண்டும்" என்று பாட்டி அநேக முறைகள் மனத்தை வைராக்கியத்துக்கு இழுத்து வந்திருக்கிருள். அந்த வைராக்கியம் அரை நிமிஷ:ங் கூட நிலைக்காது. மாமியாருக்கும் நாட்டுப் பெண்ணுக்கும் ஏதாவது ஒரு காரணத்தைப்பற்றித் தினம் சண்டையும் பூசலும் ஏற்படும். இருவரும் நாள் கணக்கில் பேசமாட்டார்கள். ஆனல், பாட்டி சாப்பிடாமல், மங்களம் அந்த வீட்டில் ஜலபானம் பண்ணமாட்டாள். வயசான மனுவதி என்கிற மரியாதை யும் அபிமானமுந்தான்் காரணம். ராஜமையருக்கு இலைபோட்டுப் பரிமாறும்போதே, மாமியாருக்கும் இலைபோட்டுவிடுவாள் மங்களம். மாமி யார் சொன்ன சொற்கள் மனத்தை வாட்டி எடுத்தாலும், அவருக்குச் செய்யும் சிசுருவைடியில் கொஞ்சம் கூடக் குறைவு இராது.
ராஜமையர் எதையும் காதில் வாங்கிக்கொள்ள மாட்டார். மனைவியைத் தனிமையில் சந்திக்கும்போதெல்லாம், 'மங்களம்! நீ சாப்பிட்டாயா? உடம்பைக் கவனித்துக்கொள்ளாமல் வேலை வேலை என்று பறக்கிருயே!' என்று அன்புடன் கடிந்துகொள்வார். "ஆமாம், வேலை செய்யாவிட்டால் உங்கள் வீட்டில் எனக்கு யார் சோறு போடுகிரு.ர்கள்!' என்று நிஷ்டுரமாகக் கேட்பாள் மங்களம். ---
"'உங்கள் வீடா? அடி அசடே! வீட்டுக்கு நீதான்ே எஜமானி? நீதான்ே இந்தக் கிருகத்தில் அன்னபூரணியாக இருக்கிருய்? நான்கூட உன்னிடந்தான்ே. தேஹி' என்று வர வேண்டும்' என்று கூறி, அவள் கரங்களை அன்புடன் பற்றித் தம் கைகளில் சேர்த்துக்கொள்வார். அவருடைய இன்ப ஸ்ப்ரிசத்தில் ஆயிரம் வருஷங்களின் கஷ்டங்களே மறந்து விடுவாள் மங்களம். . . . - -