<!- О
இருளும் ஒளியும்
அந்த ஊரிலிருக்கும் கோதண்டராமனின் ஆலயம் அன்று ஜகஜ்ஜோதியாக விளங்கியது. பிராகாரத்தைச் சுற்றிவந்த ஸ்ரஸ்வதி அழகிய மனம் உருகும் காட்சி ஒன்றைக் கவனித்தாள். வயது முதிர்ந்த கிழவி ஒருத்தி, கோவில் பிராகாரங்களுக்கு விளக்கேற்றிக்கொண்டே வந்தான்். இவள் எதற்காகக் கோவி லுக்கு விளக்கேற்ற வேண்டும்? ஆசைக்காதலன் கிடைக்க வேண்டும் என்று தவம் புரிகிருளா? வீட்டை விளங்கவைக்க மகப்பேறு வேண்டும் என்று வேண்டுகிருளா? செல்வம் கொழிக்க வேண்டும் என்று விளக்கேற்றிக் கும்பிடுகிருளா?-ஸரஸ்வதியின் ஆச்சரியம் எல்லே கடந்துவிட்டது. மெதுவாக அவளருகில் சென்று ஸரஸ்வதி. 'பாட்டி' என்று அழைத்தாள். 'உங்க ளுக்கு என்ன கோரிக்கை நிறைவேறுவதற்காக இப்படி விளக கேற்றி வணங்குகிறீர்கள்?' என்று கேட்டாள்
கிழவியின் கண்களில் கண்ணிர் பெருகியது. 'அம்மா! சில வருஷங்களுக்கு முன்புகூடக் கண்கள் சரியாகத் தெரியாமல் இருந்தன. பெரிய பெரிய சிகிச்சைகள் செய்துகொள்ளப் பணம் இல்லை. கோதண்டராமனை நம்பினேன். பார்வை கிடைத்தது. என் கண்களுக்கு ஒளி தந்தவனுக்கு நான் விளக்கேற்றுகிறேன் அம்மா. ஒளிமயமாக இருப்பவனை ஒளியின் மூலமாக வணங்கு. கிறேன்.'
பொருள் நிறைந்த அவள் வார்த்தைகளேக் கேட்டு லரஸ்வதியின் உள்ளம் சிலிர்த்தது. எல்லோருடைய வாழ்விலும் ஒளி அவசியம். இரவாகிய இருளைக் கண்டால் சகல ஜீவன்களும் அஞ்சுகின்றன. நித்திரை மயக்கத்தில் ஆழ்ந்து. இருளை விரட்டி ஒளியைக் காண விழைகின்றன. அருளுேதயத்தை எதிர்பார்த்து நிற்கிருேம். "நல்லபடியாகப் பொழுது விடியட்டும் என்பதில் வாழ்விலே ஒளி வீசட்டும் என்கிற அர்த்தம் மறைந்து கானப் படுகிறது.
"ரகுபதி - சாவித்திரியின் வாழ்வில் ஒளி வீசட்டும். தங்கமும் சந்துருவும் ஒளியுடன் வாழட்டும். என் கலை வாழ்விலே