உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இருளும் ஒளியும்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.

பாடத் தெரியுமா ?

மாலே நான்கு மனிைக்கு ஸரஸ்வதி, ஸ்வர்ணம், ரகுபதி மூவரும். ராஜமையர் ரயிலடிக்கு அனுப்பி இருந்த மாட்டு வண்டியில் சாவித்திரியின் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள்.

'வாருங்கள் அம்மா! வா. . ம்மா!' என்று மங்களம் வாய் நிறைய உபசாரத்துடன் கூப்பிட்டு, எல்லோரையும் உள்ளே

அழைத்துப் போனள். 'இவன்தான்் என் மூத்த பையன் சந்திர சேகரன்' என்று ராஜமையர் தம் பிள்ளையை வரப்போகும் மாப்பிள்ளைக்கு அறிமுகம் செய்து வைத்தார். 'இப்படி உட்

காருங்கள் மாமி' என்று கூறி, சீதா, ரத்தினக் கம்பளம் ஒன்றை எடுத்து விரித்து உபசரித்தாள். ஸரஸ்வதியும் ஸ்வர்ணமும் அமர்ந்து, லோகாபிராமமாகப் பேசிக்கொண் டிருந்தனர். சம்பிர தாயப்படி சிற்றுண்டியும் காபியும் சாப்பிட்டு முடிந்த பின்பு, ஸரஸ்வதி தன்னுடன் கொண்டுவந்திருந்த பையிலிருந்து பழம், பாக்கு, வெற்றிலே, புஷ்பம் முதலியவைகளை எடுத்து ஒரு தட்டில் வைத்தாள்.

'பெண்ணை வரச்சொல்லுங்கள் மாமி' என்ருள் ஸரஸ்வதி. வினேயைப் பழிக்கும் அவள் குரல் இனிமையைக் கேட்டுச் சந்துரு. அடிக்கடி அவளைத் திரும்பிப் பார்த்தான்். சாந்தமும் அழகும் கொண்ட அந்த முக விலாசத்தை அவன் - இதுவரை பார்த்தஎந்தப் பெண்ணிடத்திலும் கண்டதில்லை என்று நினைத்தான்். ஆனால், கருணை வடியும் இந்த முகத்தை எங்கோ பார்த்த ஞாபகம் ஒன்று லேசாக அவன் மனத்தில் தோன்றியது. எங்கே பார்த்திருக்க முடியும்? போன வருஷம் வடக்கே போய். வந்தான்ே அங்கே யாரையாவது கண்டிருப்பாளு? சிறிது நேரம் யோசனையில் மூழ்கி இருந்தான்் சந்துரு. திடீரென்று ஏதோ நினைவு விந்தவளுகக் கூடத்தில் மாட்டப்பட்டிருந்த ஸரஸ்வதி தேவியின் படத்தைப் பார்த்தான்் சந்துரு. அந்த முகத்தில் நிலவும் கம்பீரமும் சாந்தமும் இந்தப் பெண்ணிடம் ஏதோ கொஞ்சம் இருக்கிறது. அது போதாதா அவளை எழிலுள்ள வளாகக் காட்டுவதற்கு! சகல கலாவாணியாகிய ஸரஸ்வதி தேவி