14 இருளும் ஒளி பும்
பாட்டுக் கற்றுக்கொள்கிறவள். எனக்காகத் தான்் தம்பூர் வாங்கி யிருக்கிரு.ர்கள். சாவித் திரி அதைத் தன் விரலாலும் தொட்ட தில்லை!" என்று கூறிவிட்டுக் 'களுக் கென்று பிரித்தாள்.
அப்படியானுல் யாராவது பாட்டுத் தெரிந்தவர்கள்தான்் இரண்டு பாட்டுகள் பாடக்கூடாதா? என்ன ஸ்ரஸ் இந்தப் பூனே யும் பாலைக் குடிக்குமா என்று உட்கார்த்திருக்கிருயே? நீதான்் பாடேன். கல்யாணப் பெண் தான்் பாடவேண்டும் என்று எந்தச் சாஸ்திரத்திலாவது சொல்லியிருக்கிறதா?' என்று ரகுபதி உரிமையுடன் ஸ்ர ஸ்வதியிடம் கூறின்ை.
பாடித்தான்் ஆகவேண்டும் என்ரு ல், கட்டாயம் பாடிவிடு இறேன், அத்தான்்' என்று சரஸ்வதி கூறிவிட்டு, சீதாவின் பக்கம் திரும்பி, ' சீதா! நீ போய்த் தம்பூரை எடுத்து வா அம்மா' என்ருள்.
ஸ்ரஸ்வதி பாடப்போ கிருள் என்பதைக் கேட்டவுடன் சந்துருவின் மனம் சந்தோஷத்தில் ஆழ்ந்தது. தம்பூரை மீட்டிக் கொண்டு மெல்லிய குர லில் அவள் பாட ஆரம்பித்ததும் அங் கிருந்தவர்கள் எல்லோரும் மெய்ம் மறந்து உட்கார்ந்திருந்தனர். 'ஆஹா! இவ்வளவு அழகும் சங்கீத ஞானமும் உடைய பெண்ணைவிட்டு, அசலில் இவர்கள் பெண் தேடுவானேன்?" என்று சந்துரு நினைத்து வியந்தான்். மங்களமும் இதையே நினைத்து ஆச்சரியப்பட்டாள். கூடத்தில் மாட்டியிருந்த ஸரஸ் வதி தேவியின் படத்திலிருந்தே, மானிட உருக்கொண்டு இந்தப் பெண் வந்து உட்கார்ந்து பாடுகிறதோ என்று ஐயம் ஏற்படும் நிலையைச் சிருஷ்டித்துவிட்டாள் ஸரஸ்வதி. அவள் உள்ளம் உருக, பால் நினைந்துாட்டும் தாயினும் சாலப் பரிந்து' என்கிற பாடலைப் பாடியபோது, எல்லோர் உள்ளமும் அந்தப் பக்திப் பிரவாகத்தில் லயித்து, அதிலேயே அழுந்திவிட்டன என்று கூறலாம். ஸரஸ்வதி, கச்சிதமாக நான்கு கீர்த்தனங்கள் பாடித் தம்பூரை உரைக்குள் இட்டு, மூடி வைத்துவிட்டு, உட்கார்ந் ததுந்தான்் எல்லோரும் சுய நினைவை அடைந்தார்கள்.
'நன்ருகப் பாடுகிருளே! இந்தக் குழந்தைக்குக் கல்யாணம் ஆகிவிட்டதா?' என்று மங்களம ஸ்வர்ணத்தைப் பார்த்துக் கேட்டாள். ஸ்வர்ணம் சிறிது நேரம் ஒன்றும் தோன்ருமல் பதில் எதுவும் கூருமல் உட்கார்ந்திருந்தாள். பிறகு, கண்ணிர் திரையிட, ' இல்லை. அவளுக்குத்தான்் பகவான் ஒரு ரோத குறையைக் கொடுத்துவிட்டானே!' என்ருள் ஸ்வர்ணும்பாள்.