பக்கம்:இருளும் ஒளியும்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 இருளும் ஒளியும்

பெண்ணி ன் மன ஆழத்தை இன்னுெரு பெண்ணே புரிந்துகொள்வது கஷ்டம்' என்பதை ஸரஸ்வதி உணர்ந்திருக்க மாட்டாள். சிலர் வெகுளியாக இருக்கிரு ர்கள். மனத்தில் ஒன்றையும் ஒளித்து வைக்கமாட்டார்கள். படபடவென்று பேசிவிடுவார்கள். சிலரின் மன ஆழத்தில் என்ன எண்ணங்கள் இருக்கின்றன - ன்பதையே எவ்வளவு முயன்ரு லும் புரிந்து கொள்ள முடி யாது. ஸ்ரஸ்வதி வெள்ளே மனம் படைத்தவன் : கபடம் இல்லாதவள்: சூதுவாதுகளுக்கு மனத்தில் அவள் இடமே அளிக்கவில்லே.

சாவித் திரி, வார்த்தைகளையே அளந்து பேசும் சுபாவம் படைத்தவள். உள்ளத்தில் ஏற்படும் உணர்ச்சிகளே அப்படியே முகத்தில் காட்டி, ஒரு நொடிப் பொழுதில் எல்லோரையும் மட்டத் தட்டிவிடுவாள் அவள். பேசாமல் மெளனமாக உட்கார்ந் திருக்கும் சாவித்திரியை ஸரஸ்வதி கேலியாகப் பார்த்து. 'இப்பொழுது என்னிடம் ஒன்றும் சொல்லமாட்டாய். அப்படித் தான்ே? அத்தாவிடமே நேரில் சொல்லப் போகிருயாக்கும்! -g)^o* ib. . . . . . ' என்று பெருமூச்சு விட்டுவிட்டு அந்த இடத்தை

விட்டு எழுந்து சென்ருள்.

இவ்வளவு நேரமும் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த பாட்டிக்க இப்போதுதான்் சந்தர்ப்பம் கிடைத்தது. 'இதென்னடது அதிசயம்! பெண் பார்க்க வந்தால் அவளைப் பாடச் சொல்றதைத் தான்் கண்டதுண்டு; கேட்டதுண்டு. இங்கே தலைகீழ்ப் பாடமா யிருக்கே! யாரோ ஒருத்தி வருகிருள்; இல்லாத உறவெல்லாம் கொண்டாடி புருஷா இருக்கிறதையும் பார்க்காமே பாட்டுக் கச்சேரி செய்கிருள். இதுகளும் பேஷ் பேஷ்னு தலையாட்டுகிறது கள் ஹாம். . . . நன்ருகவே யில்லை' என்று சரளி வரிசை பாட ஆரம்பித்துவிட்டாள். ஆனால் அவளை யாரும் சட்டை செய்வ தாக இல்லை. குறை சொல்வதுதான்் அவள் கூடப் பிறந்த குண மாயிற்றே என்று உதறிவிட்டு, மேற்கொண்டு ஆகவேண்டியதைக் கவனிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.