உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இருளும் ஒளியும்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 இருளும் ஒளியும்

இதுவரையில் பேசாதிருந்த ரகுபதி ஸரஸ்வதியின் பக்கம் திரும்பி, ' ஸ்ரஸ்-! நீ தான்் பாடேன். இதில் நான், நீ என்று போட்டிக்கு என்ன இருக்கிறது?' என்று கூறிஞன்.

ஸ்ரஸ்வதி சிரித்துக்கொண்டே உள்ளே போய்த் தன் வினேயை எடுத்து வைத்துக்கொண்டு ஸ்ருதி சேர்க்க ஆரம்பித் தாள். துரத்தில் நின்று இதுகாறும் ஸரஸ்வதியின் பரிகாசங் களைக் கவனித்துவந்த சந்துரு பந்தலுக்குள் வந்து உட்கார்ந்து கொண்டான்.

ஸ்ருதி சேர்த்து முடிந்ததும் ஸரஸ்வதி ரகுபதியைப் பார்த்து, அத்தான்்! எந்தப் பாட்டை வாசிக்கட்டும்?' என்று கேட்டாள். அதற்குள் ராஜமையர், ' குழந்தை! வுண்முகப்பிரியா ராகத்தை. நீ அற்புதமாக வாசிப்பாயா.மே. எல்லோரும் சொல்லுகிரு.ர்கள்: அதையே வாசி, அம்மா கேட்கலாம்' என்றார்.

வீணையின் மதுர ஒலி, அந்த மோகன நிலவிலே தேவ லோகத்துக் கின்னரர்கள் எழுப்பும் யாழின் ஒலிபோல் இருந்தது. குழந்தைகள் கொஞ்சும் மழலையைப்போல் மனதுக்கு இன்பமளித்தது. மகான்களின் உபதேச மொழிகளைக் கேட்டு ஆறுதல் கொள்ளும் மன நிலையை அங்குள்ளவர்கள் அடைந். தார்கள். தெய்வ சந்நிதான்த்தில் நிற்கும் பரவச நிலையைச் சிலர் அடைந்தார்கள். சந்துருவின் உள்ளம் கிளுகிளுத்தது. நொடிக்கொரு முறை அன்புடன் ஸரஸ்வதியை அவன் பார்த்த போது அவன் பார்வையின் தாக்குதலைச் சகிக்க முடியாமல் ஸ்ரஸ்வதி தலையைக் குனிந்துகொண்டே பாடினுள்.

வெளியே பாலைப் பொழிவதுபோல் நிலவு வீசிக்கொண் டிருந்தது. களி நடனம் புரியும் மோகன சந்திரிகையிலே, ஸ்ரஸ் வதியின் குரல் இனிமையோடு, இழைந்துவரும் விளு கானம் ஒவ்வொருவர் உள்ளத்தில் ஒவ்வொரு விதமான உணர்ச்சியை ஊறச் செய்தது.

"ஷண்முகப்பிரியா ராகத்தில், "வள்ளி நாயகனே' என்கிற கிர்த்தனத்தை முடித்த ஸரஸ்வதி "சங்கராபரணத்தில் ஒரு ஜாவளியையும் வாசித்தாள். மதுர கீதத்தைப் பருகியவாறு அங்கிருந்தவர்கள் மெய்ம் மறந்து உட்கார்ந்திருந்தனர்.