32 இருளும் ஒளி யம்
'ஆமாம். ஆமாம். . உங்கள் காலத்தைக் கொஞ்சம் நினைவு படுத்திக்கொள்ளுங்கள். நமக்குக் கல்யாணம் முடிந்ததும், என் அண்ணு பிள்ளைக்கு ஆண்டு நிறைவு. அத்தை பெண்ணுக் குச் சீமந்தம்' என்று என்ன எங்கே பிறந்தகத்தில் தங்கவிட்டீர்கள்? வேண்டியதுதான்் உங்களுக்கும்!' என்று மங்களம் பழைய விஷயங்களே நினைவுபடுத்தினுள். இருந்தாலும், அவள் குரலும் கம்மிப்போயிருந்தது.
இவர்கள் கூடத்தில் உட்கார்ந்து பேசிக்கொண் டிருந்த சமயம் காமரா அறையில் சாவித்திரி தன் கணவன் எழுதி இருந்த கடிதத்தைப் படித்துக்கொண் டிருந்தாள். திரும்பத் திரும்பப் படிக்கும்படியாக அக்கடிதம் காதல் ரஸத்தில் தோய்ந்த தாகவோ, சிறிது இன்ப மொழிகளைக் கொண்டதாகவோ இல்லை. அதற்கு மாருகக் கடிதத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரையில், ஸரஸ்வதி, சாவித்திரியைத் தினமும் எதிர்பார்ப் பதைப்பற்றியும், அவன் மனம் கோளுமல் அவள் ஸரஸ்வதியிடம் சங்கீதம் பயின்று இன்னும் சில வருஷங்களில் ஒரு பாடகி ஆக வேண்டும் என்பதை வற்புறுத்தியும் எழுதப்பட் டிருந்தது.
சாவித்திரி பற்றிவரும் எரிச்சலுடன் கடிதத்தைப் பெட்டியில் வைத்து. 'டப் பென்று அகங்காரத்துடன் மூடினுள். கீழே சந்துருவின் குரல் பலமாகக் கேட்டது.
'ஊருக்குப் போகும்போது நல்ல வீணையாக ஒன்று வாங்கித் தந்துவிடேன். மாப்பிள்ளைக்குப் பரம திருப்தியாக இருக்கும்." என்று சொல்லிக்கொண் டிருந்தான்் சந்துரு.
தடதடவென்று கோபத்தில் இரண்டொரு படிகளைத் தாண்டி இறங்கிக் கீழே வந்தாள் சாவித்திரி. வந்த வேகத்தில் மேல்மூச்சு வாங்குவதையும் பாராட்டாமல், 'எனக்கு வீணையும் வேண்டாம்! பூனேயும் வேண்டாம். உங்களுக்கெல்லாம் வேறு வேலையே கிடையாதா என்ன?' என்று எரிந்துவிழுந்தாள் அவள்.
சீதாவும். சந்துருவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கண்ணைச் சிமிட்டிக்கொண்டனர்.
'நம் வழக்கப்படி சீர் செய்துவிடுவோம்; புருஷன்பாடு, மனைவிபாடு. நாம் ஒன்றும் வீணை வாங்கவேண்டாம்' என்று கூறி மங்களம் அங்கே ஆரம்பிக்க இருந்த சண்டைக்கு முற்றுப் -புள்ளி வைத்தாள்.