பக்கம்:இருளும் ஒளியும்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 இருளும் ஒளியும்

தகப்பனுரைப்போலவே சங்கித விழாக்கள் நடத்திஞன். அதற். காக நன்கொடைகள் கொடுத்தான்்.

குழந்தைப் பருவத்திலிருந்து தாயை இழந்து தன்னுடன் வளர்ந்துவந்த ஸரஸ்வதிக்கும் அவ்வித்தையைப் பழுதில்லாமல் க பித்தான்். தனக்கு வாய்க்கும் மனைவியும் அம்மாதிரி இருக்க .ேண்டும் என்று அவன் ஆசைப்படுவது இயற்கையே அல்லவா?

அன்று கோழி கூவுவதற்கு முன்பே ரகுபதியின் விட்டில் எல்லோரும் விழித்துக்கொண்டுவிட்டார்கள். வேலைக்காரி, வரப்போகும் தன் புது எஜமானிக்காக விதவிதமாகக் கோலங் கள் போட்டு, செம்மண் பூசிக்கொண் டிருந்தாள். சமையலறை யில் ஸ்வர்ளும்பாளும், ஸரஸ்வதியும் காலை ஆகாரம் தயாரிப் பதில் முனேந்திருந்தனர். எவ்வளவுதான்் பணம் காசில் மூழ்கி இருந்தாலும், சமையலுக்கு ஆள் வைத்துக்கொள்ளும் வழக்கம் மட்டும் அவ்வூரில் இல்லை. யார் வீட்டில் எந்த விசேஷம் நிகழ்ந் தாலும் ஊரில் உள்ள அத்தனை பெண்களும் ஒன்று சேருவார்கள். தலைக்கொரு வேலையாகச் செய்வார்கள். வேலையும் அழகாகவும் ஒழுங்காகவும் முடிந்துவிடும். அன்றும் கோடி வீட்டிலிருந்து பாகீரதி அம்மாமி வந்திருந்தாள். வயது அறுபது இருக்கும். வாய் படபடவென்று எதையாவது பொரிந்து தள்ளுவதற்கு ஈடாக கையும் சரசாவென்று லட்சியமில்லாமல் வேலை செய்து கொண்டிருக்கும். இதற்கு நேர் விரோத குணம் படைத்தவள் ரகுபதியின் தாய் ஸ்வர்ணும்பாள். கறிகாய் நறுக்க உட்கார்ந் தால் மணிக் கணக்காக அங்கேயே உட்கார்ந்திருப்பாள்!

பாகீரதி அம்மாமி மற்றக் காரியங்களைக் கவனித்துக்கொண் டிருக்க, ஸ்வர்ணம் ஒரு கூடை நிறையக் காய்கறிகளை வைத்துக் கொண்டு அரிவாள்மணைக்கு முன்பு உட்கார்ந்திருந்தாள். உள்ளே யிருந்து கமகமவென்று சமையல் வாசனை கிளம்பிக்கொண் டிருந்தது. பாகீரதி அம்மாமி பாயசத்துக்குச் சேமியாவை வறுத்துக்கொண்டே, 'ஏண்டி ஸ்வர்ணம்! நீ முன்குடி அந்த இடத்தைவிட்டு எழுந்திரு பார்க்கலாம். மீதியை நான் நறுக்கிக் கொள்கிறேன்' என்ருள்.

'இருக்கட்டும் அம்மாமி, நீங்கள் எத்தனை காரியங்கள்தான்் செய்வீர்கள்?"

'நான் என்னத்தைச் செய்ய இருக்கிறது? அடுப்பில் வைத்தால் தான்ே ஆகிறது. ஏண்டி புடலங்காயைக் கூட்டுக்கு